 கலை........அப்படியானால் அண்மையில் இந்துமாக் கடல் கொந்தளிப்புக்கு லட்சக்கணக்கான உயிர்கள் பலியானது எப்படி?
ராஜா........அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது தொடர்ச்சியான ஒரு நடவடிக்கை. ஒரே இரவில் எல்லா அறிவையும் ஆற்றலையும் பெற்று விட முடியாது. மேலும் நவீன அறிவியல் வளர்ச்சி என்பது கடந்த சுமார் 400 ஆண்டுகளாகத் தான் நடைபெற்று வருகின்றது. இந்தக் குறுகிய காலத்திற்குள்ளே எவ்வளவோ அரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இதனால் மனிதனின் வாழ்க்கைச் சூழல் மேம்பட்டுள்ளது. மனிதன் அறிவியலுக்கும் தொழில் நுட்பத்துக்கும் உள்ள ஆற்றல் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.அதனுடைய எதிர்கால வளர்ச்சியிலும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இயற்கையின் விதிகளைப் புரிந்து கொள்வதில் மனிதன் இன்னமும் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கின்றான். இயற்கை பற்றிய நமது அறிவு எவ்வளவு மேம்போக்கானது என்பதை இந்த சுனாமி பேரழிவு நிரூபித்துவிட்டது. அதனால் நிலநடுக்கம் மற்றும் கடல் கொந்தளிப்பு பற்றிய முன்னெச்சரிக்கை கருவிகளை உருவாக்குவது பற்றி இப்போது தீவிரமாக சிந்திக்கப்படுகின்றது.

கலை........மனிதனுக்கு தனது உயிர் மீது பயம் வந்துவிட்டால் தானாகவே இயர்கையை மதிக்கத் தொடங்கி விடுவான். அறிவியல் தொழில் நுட்பம் என்பது இரண்டு பக்கமும் கூர்மையான வாள் போன்றது. அதை மனிதர்களின் நலனுக்காக பயன்படுத்தும் போது பகுத்து ஆராய்ந்து அதன் பிறகே பயன்படுத்த வேண்டும். 1 2
|