• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-31 13:33:23    
அறிவியல் மனப்பான்மையுடன் வாழுவது

cri
இல்லாவிட்டால் போபால் நச்சுவாயுக் கசிவு, செர்னோபில் அணுசக்தி ஆலை விபத்து போன்ற துயரங்கள் நிகழ்வதை தவிர்க்க முடியாமல் போகும். அதனால் தான் இந்தியாவில் மேதாபட்கர் அம்மையார் போன்றவர்கள் இயற்கைப் பாதுகாப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜா........அதற்காக இயற்கை வளங்களை வீணாக்க முடியுமா? இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள உறவு பற்றி பார்க்கும் போது எது முக்கியம் –மக்களின் ஒட்டுமொத்த நலனா? அல்லது இயற்கைப் பாதுகாப்பா? என்பதைப் பார்க்க வேண்டும். எடுத்துக் காட்டாக நீங்கள் மேதா பட்கர் அம்மையைரைப் பற்றி கூறியதால் சொல்கிறேன்-பெருகி ஓடும் காட்டாற்று வெள்ளத்தை தடுத்து அணைகட்டி மின்சாரம் எடுப்பதில் தவறில்லை. இதனால் மனித குலத்துக்கு மிகவும் தேவைப்படும் எரிசக்தியான மின்சாரம் கிடைக்கிறது.

கலை........இவ்வாறு அணைகட்டும் போது இரண்டு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்று கட்டுமானப் பணி நடைபெறுவதால் அப்பகுதியின் இயற்கைச் சூழல் அழியும். மரங்கள் வெட்டப்படும். அங்கு வசிக்கும் உயிரினங்களுக்கு புகலிடம் இல்லாமல் போகும். பல தலைமுறைகளாக அங்கு வாழும் பழங்குடி மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இன்னொரு பிரச்சினை நதியின் போக்குமாறி புதிய இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பேரழிவு அதிகமாகலாம்.

ராஜா........இது தேவையில்லாத கவலை. அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டுள்ள இக்காலத்தில் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது அவ்வளவு கடினமான செயல் அல்ல. ஆகவே இயற்கைச் சூழல் பாதுகாப்பா எரிசக்தி தேவையா-இதில் எது அதிக முக்கியம் என்பதைப் பார்த்து எடைபோட்டு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். இயற்கை ஒரு இருட்டறை அதற்குள்ளே எத்தனையோ புரியாத புதிர்களும் ரகசியங்களும் மறைத்திருக்கின்றன. அறிவியல் என்ற ஒளிப்பத்தம் ஏற்றி இருட்டறையில் வெளிச்சத்தைப் பரப்பி, இயற்கையைப் புரிந்து கொள்வோம். இயற்கையைக் கெடுக்காமல் அதைப் பயன்படுத்த வழி காண்போம்.

1  2