• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-01 22:07:08    
திபெத் இன மக்களின் பாரம்பரிய விழா

cri

திபெத் இன நாள்காட்டி படி டிசம்பர் 30ந் நாள், அதாவது பிப்ரவரி எட்டாந் நாளும் சிறப்பு நாளாகும். ஒவ்வொரு வீடும் சுத்தம் காணப்படுகின்றது. திபெத் இன பாணியுடைய வீடுகளின் கதவுகளிலும் சன்னல்களிலும் புத்தம் புதிய வண்ணப்பட்டுத் துணி போடப்படும். அவை, அனைத்து குடும்பங்களின் கதவுகள் மற்றும் சன்னல்களில் பறக்கின்றன. பார்ப்பதற்கு குடும்ப அறையில் வண்ண வண்ணமாக காட்சியளிக்கின்றது. புத்தாண்டுக்கு முன் Lang Zhen குடும்பத்தினர்கள், அறைகளை சுத்தம் செய்து விட்டனர்.

புத்தாண்டின் முதல் நாளுக்கான உணவுப்பொருட்களைத் தயாரிப்பது புத்தாண்டு கொண்டாட்டத்தின் பெரும் நிகழ்ச்சி ஆகும். இப்பொருட்களில், சோதுமை மாவ் கஞ்சி, பார்லி மது, ஆட்டு மாட்டு இறைச்சி உள்ளிட்ட பாரம்பரிய உணவுப்பொருட்கள் இன்றியமையாதவை.

தவிரவும், நாற்காலிகளில் புதிய உறைகள் போட வேண்டும். கடவுள் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கு முன் "Hada" எனும் புதிய வெள்ளைப்பட்டு துணியை விரிக்க வேண்டும். படையல் இட வேண்டும். எல்லாம் தயாராகிய நிலையில் புத்தாண்டை வரவேற்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மகிழ்ச்சி ஊட்டும் "Zhe Ga" ஒலி , புத்தாண்டு வருவதைக் கட்டியங்கூறுகிறது. "Zhe Ga" என்பது, திபெத் இன கதைப்பாடலாகும். புத்தாண்டின் முதல் நாளில் அதிகாலையிலேயே, "Zhe Ga" கலைஞர்கள் வீடுவீடாகச் சென்று புத்தாண்டை வாழ்த்திப் பாடிவிட்டு, பணமோ மதுவோ, காய்கறிகளோ பெறுவர். யாருமே அவர்களை பிச்சைக்காரர்களாக கருதுவதில்லை. மாறாக இதனை, புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒரு முக்கிய பகுதியாகக் கொள்கின்றனர்.

1  2