
"Zhaxidele! Zhaxidele!"என, திபெத் புத்தாண்டு, மக்கள் வணக்கம் தெரிவிக்கும் ஒலியில் துவங்குகின்றது. அனைவரும் பகட்டாக வண்ண வண்ணப்புத்தாடை அணிந்து, எழிலான அலங்காரப் பொருட்களைச் சூடி சந்திக்கும் போது "Zhaxidele"என, வணக்கம் தெரிவிப்பர். "மங்களம்" என இது பொருட்படுகின்றது. ஆனால், புத்தாண்டின் போது, இதில் எல்லா அன்புணர்வும் அடங்கும்.

Zhuo Ga, Lang Zhen இன் இளம் பெண். இருப்பினும், அவள் தாயாகி விட்டார். புத்தாண்டின் காலையில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி ஒருவருக்கு ஒருவர் நல்வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி, அவளை மனமுருகச் செய்திடும். இத்தகைய அன்புமிக்க குடும்பத்தில் பிறந்ததினால் அதிர்ஷ்டமும் இன்பமும் அடைவதாக அவர் உணர்கிறார். நல்வாழ்த்து தெரிவித்த பின், அண்டை அயலாலர்கள் வந்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பர். அயலாலர்களுடன் நல்லுறவை நிலைநிறுத்துவதற்கான மிக முக்கியமான மரியாதை நிகழ்ச்சியாக இது திகழ்கின்றது. இப்போது இளைஞர்களிடையே, ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதற்கான சில புதிய வடிவங்கள், அதிகமாக காணப்படுகின்றன. Zhuo Ga கூறியதாவது
"நான் இமையில் மூலம் எனது நண்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம். இவ்வாறு, நண்பர்களைச் சந்திக்கப்போகும் அவசரத்தைத் தவிர்க்கலாம். அன்றி, சந்திக்க இயலாத நண்பர்களுக்கு மின் அஞ்சல் இமெயில் அனுப்பலாம். இது வசதியானது விரைவானது. இப்போது இத்தகைய முறை பல்கிப் பெருகிவிட்டது." என்றார், அவர்.

புத்தாண்டு நாட்களில், வண்ணத்து மதக்கொடியைத் தொங்க விடுவது, மற்றொரு முக்கிய நிகழ்ச்சியாகும். எந்த நேரமும் இம்மதக்கொடி தொங்கவிடப்படுவதில்லை. திபெத் நாள் காட்டியின் படி முக்கியமான நாளிலே மட்டுமே தொங்கவிடலாம். வீட்டின் உச்சியில் கோலாகலமாக மதக்கொடி பறக்க விடப்படும்" என்று இக்குடும்பத்தின் ஆண்உரிமையாளர் Ta Jie கூறினார்.
புத்தாண்டின் முதல் நாளுக்குப் பின், பலவகைகளில் விழா கொண்டாடப்படுகிறது. கடவுள்களுக்கு வழிபாடு செய்வது, புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பது, அல்லது நெருங்கிய நண்பர்களுடன் சுற்றுலா செல்வது போன்றவை, கெண்டாட்ட முறைகளாகும். எப்போதுமே திபெத் இன புத்தாண்டு இவ்வளவு மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் 15 நாட்கள் நீடிக்கும்.
முந்தைய ஆண்டுகளிலிருந்து வேறுபட்டது என்ன என்றால், இவ்வாண்டில் இரண்டு விழாக்கள் சேர்ந்து வருகின்றன. எனவே, இரட்டை மகிழ்ச்சி உருவாகும் என்பது இயல்பே. 1 2
|