• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-04 12:39:25    
சீனாவில் சில்லறை விற்பனை துறை

cri

உலகின் மிகப் பெரிய சில்லறை விற்பனை தொழில் நிறுவனமான அமெரிக்காவின் W-mart, சீனாவில் தாமதமாக அங்காடியை நிறுவிய போதிலும், விரைவான வளர்ச்சி கண்டுள்ளது. அண்மையில் Wal-martவின் தலைமை இயக்குநர் Lee Scott சீனாவில் பயணம் மேற்கொண்டார். சீனாவில் Wal-mart கண்டுள்ள வளர்ச்சி குறித்து அவர் மனநிறைவு அடைகிறார். அவர் கூறியதாவது—

"கடந்த 8 ஆண்டுகளில் Wal-mart சீனாவில் முதலீடு செய்து, பல நகரங்களில் கிளைகளை நிறுவியுள்ளது. Wal-mart சீனாவில் விரைவாக வளர்ச்சியுற்று வருகிறது என்று நான் மகிழ்ச்சியுடன் உங்களிடம் சொல்லலாம். எங்கள் விற்பனை வருமானமும், பணியாளரின் எண்ணிக்கையும் அங்காடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இவ்வாண்டு நாங்கள் சீனாவில் மேலும் பல கிளைகளை நிறுவுவோம்" என்றார் அவர்.

பிரெஞ்சு Carrefour, ஜெர்மன் Metro ஆகிய மிகப் பெரிய சில்லறை விற்பனை குழுமங்கள் Wal-martவின் வலுவான போட்டியாளர் ஆகும். சீனாவில் வளர்ச்சி காண முடியும் என்று அவை முழு நம்பிக்கை கொண்டுள்ளன. அடுத்த 3 ஆண்டுகளில் அது சீனாவில் நிறுவிய அங்காடிகளின் எண்ணிக்கை 100 தாண்டும் என்று முதலில் சீனாவில் நுழைந்த Carrefour நிறுவனம் அறிவித்தது.

அந்நிய முதலீட்டு வணிக தொழில் நிறுவனங்கள், குறிப்பாக, புகழ் பெற்ற பன்னாட்டு சில்லறை விற்பனை தொழில் நிறுவனங்கள் சீனாவில் நுழைந்ததால், சீனாவின் பல வணிக தொழில் நிறுவனங்கள் பெரும் நிர்ப்பந்தத்தையும் அறைகூவலையும் எதிர்நோக்க வேண்டியுள்ளன. பெரும்பாலான சீன வணிக தொழில் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் நிர்வாக முறையிலும் தொழில் நடத்தும் மாதிரியிலும் இருந்து விடுபட்டு, சந்தைப் பொருளாதார சூழ்நிலைக்கு குறுகிய நேரத்தில் மாற வேண்டியுள்ளது. அவற்றுக்கு போதுமான அனுபவம் இல்லை. அண்மையில் வளர்ச்சி கண்டுள்ள அரசு சாரா தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் வளர்ச்சி திட்டத்தைத் தீட்டிய போதிலும், உற்பத்தி அளவு மற்றும் பயன்பாட்டில் பல பிரச்சினைகள் நிலவுகின்றன.

1  2  3