• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-04 12:39:25    
சீனாவில் சில்லறை விற்பனை துறை

cri

அந்நிய முதலீட்டு தொழில் நிறுவனங்களின் வலுவான போட்டியை எதிர்நோக்கி, சீனாவின் சில்லறை விற்பனை தொழில் நிறுவனங்கள், சீரமைப்புப் பாதையை தெரிவு செய்துள்ளன. சீரமைப்பு மூலம் தொழில் நிறுவனத்தின் அளவை விரிவுபடுத்தி, சொந்த போட்டியாற்றலை உயர்த்த அவை விரும்புகின்றன. 2003ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் உருவாக்கிய Shanghai Brilliance(Group) Co., Ltd. அவற்றில் ஒன்றாகும். சீன வணிக துறையில் மிகப் பெரிய தொழில் நிறுவனத்தை உருவாக்கும் வகையில், ஷாங்காய் முதலாவது பல சரக்கு கடையும் ஷாங்காய் Hualian கூட்டு நிறுவனமும் போட்டியை ஒதுக்கி வைத்து விட்டு, ஒன்றிணைந்துள்ளன. தற்போதைய தீவிரமான போட்டியில் Wang Fu Jing எனும் புகழ் பெற்ற சின்னத்தை நிலைநாட்டும் பொருட்டு, பெய்ஜிங்கில் அமைந்துள்ள Wang Fu Jing குழுமம், அண்மையில் சீரமைப்பு ஆற்றலை வலுப்படுத்தி வருகிறது.

Go me குழுமம் சீனாவில் மின்சாரக் கருவிகளை விற்கும் மிகப் பெரிய தொடர் தொழில் நிறுவனமாகும். ஒருங்கிணைப்பு வழிமுறை மூலம் சொந்த போட்டியாற்றல் உயர்வதோடு, தனிச்சிறப்பும் பெற முடியும் என்று இக்கூட்டு நிறுவனத்தின் திட்ட உருவரைவுத் துறையின் துணைத் தலைவர் வாங் லி ஹொங் கூறுகிறார்.

சீனாவின் சில்லறை விற்பனை துறையின் வளர்ச்சி பற்றி, பொருளியல் துறையிலான நிபுணர்கள் சிலர், கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். போட்டியில், தயாரிப்புச் சின்னம், பன்னாட்டு சில்லறை விற்பனை குழுமங்களுக்கு மிகப் பெரிய வசதியாக உள்ளது. இத்துறையில், அவற்றுக்கும் சீனாவின் சில்லறை விற்பனை தொழில் நிறுவனங்களுக்கும் பெரும் இடைவெளி நிலவுகிறது என்று சீன சர்வதேச பன்னாட்டு கூட்டு நிறுவனத்துக்கான ஆய்வகத்தின் துணைத் தலைவர் சாங் சியாவ் யூ குறிப்பிட்டார். அவர் கூறியதாவது—

"சில்லறை விற்பனை தொழில் நிறுவனம் என்ற முறையில், எவ்வகை குழுமத்தை நிறுவிய போதிலும், போலியான உற்பத்தி பொருட்களை விற்க கூடாது, உள்புற நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று நான் கருதுகிறேன்" என்றார் அவர்.

ஆகவே, தீவிரமான போட்டி நிலவும் சந்தையில், நுகர்வோருக்கு குறைவான விலையில் தரமிக்க வணிகப் பொருட்களையும் சிறப்பான சேவையையும் வழங்கும் தொழில் நிறுவனம், கூடுதலான நுகர்வோர்களை ஈர்க்க முடியும்.


1  2  3