• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-21 16:06:52    
வூத்தான் மலையில் சுற்றுலா

cri

வூத்தான் மலை பற்றி சீன வானொலி செய்தியாளர் எழுதிய கட்டுரையின் முதலாவது பகுதியைக் கடந்த வாரத்தில் இடம்பெற்ற சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் கேட்டீர்கள் அல்லவா? அது எப்படி இருக்கு?பரவாயில்லையா?இப்போது அதன் 2வது பகுதியை வழங்குகின்றோம். கவனமாகக் கேளுங்கள். வூத்தான் மலையில் 5 மீட்டருக்கு மேற்பட்ட உயரமுடைய தங்க மண்டபம் அமைந்துள்ளது. அது சுமார் 600 ஆண்டுகள் வரலாறுடையது. இதற்கு அருகில் மரத்தால் கட்டப்பட்ட சிறந்த கட்டடம் ஒன்று உள்ளது. 2 மாடிகளுடன் கூடிய இக்கட்டடத்தின் தாழ்வாரம் உள்ளிட்ட பல இடங்களில் செதுக்கப்பட்ட அழகான மரச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இந்தப் பழமை வாய்ந்த வண்ண நிறமுடைய மரச் சிற்பங்களின் நிறம் மங்கிவிட்ட போதிலும் அவற்றில் செதுக்கப்பட்ட பல்வகை வடிவ தேவதைகள் உயிருள்ளதைப் போல காணப்படுகின்றனர். இவ்விடமானது, மதப் பாடல் பாடப்படும் இடமாகும். மத நூல்கள் திரட்டிவைக்கப்பட்டுள்ள இடமும் ஆகும். இதனால், மத நூல் மண்டபம் என்றும் அழைக்கப்படுகின்றது. பயணி லிவூச்சோ ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர். இந்த மத நூல் மண்டபத்தை நுணுக்கமாகப் பார்வையிட்ட பின் அவர் கூறியதாவது, இக்கட்டடம் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. அதன் கல் சுவற்றிலிருந்து வரலாற்று அடையாளத்தைக் கண்டறியலாம். மிங் வமிசத்திலிருந்து இதுவரை குறைந்தது 600 ஆண்டு பழமையானது. இக்கட்டடத்தின் சில இடங்கள் பாழாகிவிட்டன.

வேறு சில இடங்கள் பழுதாகிவிட்டன. இது தான் வரலாற்றுச் சின்னம். அக்காலத்தின் உண்மையான பாணி அதாவது பல நூறு ஆண்டுகளாக நீடித்துவரும் பாணி அப்படியே தத் ரூபமாகக் காணப்படுகின்றது என்றார் அவர். எங்கள் செய்தியாளர் வூத்தான் மலையின் அரண்மனைகளைப் பார்வையிட்ட போது, தௌ மத ஆடை அணிந்த தௌ மதக் குருமார்கள் சிலரைக் கண்டார்.
1  2