
இம்மதக்குருமார்களில் சிலரின் மீசை மிகவும் நீளமானது. சிலர் மிகவும் இளமையானவர்கள். வூத்தான் மலையில் செவ்வனே பயிற்சி பெறுவதன் காரணமாக, இவர்கள் மிகவும் அமைதியாகக் காணப்படுகின்றனர். தௌ மதக் குரு சாங் யுன் கூறியதாவது, வூத்தான் மலையில் 100க்கும் அதிகமான மதக்குருமார்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு வெவ்வேறு கடமைகள் உண்டு. சிலர் தௌ மத இசை படிக்கின்றனர். சிலர் மத நூல் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். வேறு சிலர், கொங்பு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சில மதக்குருமார்கள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். சிலர் திருமணம் செய்யக் கூடாது. இறைச்சி வகைகளையும் முட்டை, சீன வெங்காயம் முதலிய உணவுகளையும் உண்ணக் கூடாது. நாள்தோறும் அரண்மனைக்குள் கடமையாற்றுவது தவிர, தௌ மத நூல்களையும் படிக்க வேண்டும் என்று மதத்தவர் ஒருவர் எங்கள் செய்தியாளரிடம் தெரிவித்தார். வூத்தான் மலைக் காட்சித் தலத்தில் இயற்கை காட்சிகள் பல உள்ளன. இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது, அவற்றில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. மேலும் அதிகமாக அறிந்துகொள்ள வேண்டுமானால், நீங்களே நேரில் அங்கு சென்றுபார்த்தால் மேலும் நன்றாக இருக்கும். வாய்ப்பு இருந்தால் நிச்சயம் வருகை தாருங்கள்.

இனி, சுற்றுலா பற்றிய தகவல்களை வழங்குகின்றோம். பனிக்கட்டி விளக்கு.குளிர் காலத்தில், ஹெலுங்சியாங் மற்றும் ஜெலின் மாநிலங்களின் பெரிய, சிறிய பூங்காக்களிலும் பனிக்கட்டி விளக்கு காட்சி நடைபெறுவது வழக்கம். பல்வகை பனிக்கட்டி விளக்குகள் எங்கெங்கும் தொங்கவிடப்படுகின்றன. சீன மக்கள் விரும்பும் சிங்க விளக்கு, டிராகன் விளக்கு ஆகியவை உள்ளன. ஐரோப்பிய பாணியில் தயாரிக்கப்பட்ட கோயில் வடிவ விளக்கு, கட்டட வடிவ விளக்கு ஆகியவையும் உள்ளன. இவ்விளக்குகள் கவர்ச்சிகரமானவை. இரவில், வேறுபட்ட வடிவங்களிலான வண்ண விளக்குகள் அழகாக காட்சியளிக்கின்றன. பயணிகள் இவ்விடத்தில் இருக்கும் போது, தேவலோகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். லண்டனில் சுற்றுலா.லண்டனில் 3 நாள் சுற்றுலாவுக்கு விலை 12 ஆயிரம் யுவான் முதல் 15 ஆயிரம் யுவான் வரை. இவ்விலையில் விமானச் சீட்டும் சுற்றுலாச் செலவும் அடங்கும் என்று தெரியவருகின்றது. பிரிட்டிஷ் பயணி விமானச் சேவைக் கூட்டு நிறுவனமும் அதன் சுற்றுலா சேவைப் பணியகமும் திட்டமிட்டிருக்கின்றன. 1 2
|