• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-07 01:05:42    
சீனாவின் பூதூ தீவு

cri

சீனாவிந் கிழக்கு கடலில் அமைந்துள்ள பூதூ தீவு, புத்த மத நாடென அழைக்கப்பட்டுவருகின்றது. இத்தீவிலுள்ள பூதூ மலை, சீனாவிந் புகழ் பெற்ற புத்த மத மலைகளில் ஒன்றாகும். மலையிலுள்ள சிறிய மற்றும் பெரிய கோயில்களில் புத்தரின் மூதாதையரான சாக்கியமுனியின் சீடர்கள் உள்ளனர்.

சீன வரலாற்று நூலிலான பதிவேட்டின் படி, ஜப்பானிய புத்த துறவி ஹுவெய் எவ், சீனாவிலிருந்து AVALOKITESVARA உருவச் சிலையொன்றை ஜப்பானுக்குக் கொண்டுசெல்ல முயன்றார். அவர் கப்பல் மூலம் நாடு திரும்பிய வழியில் பூதூ தீவின் அருகிலுள்ள கடற்பிரதேசத்தில் பயணம் தடைப்பட்டது.

AVALOKITESVARA ஜப்பானுக்குச் செல்ல விரும்பவில்லை என கருதி, அருகிலுள்ள கடற்கரைக்குச் சென்றார். மக்களின் வழிபாட்டுக்காக, AVALOKITESVARA உருவச் சிலை, அவ்விடத்திலேயே நிறுத்திவைக்கப்பட்டது. அதே வேளையில், அங்கு AVALOKITESVARA கோயில் அமைக்கப்பட்டது. அப்போது முதல்,AVALOKITESVARA உருவச்சிலை அங்கு நிறுத்தப்பட்டு இதுவரை ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமாகிவிட்டது.

AVALOKITESVARA கோயிலானது, தற்போதைய பூதூ மலையிலுள்ள முதலாவது பெரிய கோயிலான பூஜி கோயிலின் முந்திய பெயராகும். பூஜி கோயில் பூதூ மலையிலான புத்த மதச் செயல்பாட்டு மையமாகும். முக்கிய புத்த மதச் செயல்பாடுகளனைத்தும் இவ்விடத்திலே நடைபெற்றுவருகின்ரன.

ஜிங் வமிசக் கால கட்டிடப் பாணியுடன் கட்டியமைக்கப்பட்ட யூவதொன் மண்டபம், பூஜி கோயிலின் முக்கிய மண்டபமாகும். இம்மண்டபம், நிகவும் பரந்துபட்டது. ஆயிரம் பேர் அமரலாம். மண்டபத்திலுள்ள AVALOKITESVARA உருவச் சிலை, 8.8 மீட்டர் உயரமுடையது. தங்கத்தால் பூசப்பட்ட இச்சிலை கம்பீரமானது.

1  2