செய்தியாளர்... உலக வங்கி 80ம் ஆண்டுகளில் சீனாவில் வங்கி தொழிலை துவங்கியது முதல், அதற்கும் சீனாவுக்குமிடையிலான ஒத்துழைப்பு பற்றி உங்களுடைய கருத்து என்ன? கேரன்....உலக வங்கியின் பார்வையில் பார்த்தால் சீன அரசாங்கம் எங்களுடைய மிக சிறந்த ஒத்துழைப்புக் கூட்டாளியாக திகழ்கின்றது. உலக வங்கி வழங்கும் அனுபவத்தை கற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்துவதில் சீன அரசாங்கம் மிகவும் அக்கறை காட்டுகின்றது. செய்தியாளர்.....சீனாவுக்கு கடன் வழங்கப்பட்ட கடன் 3500 கோடி அமெரிக்க டாலரை தாண்டியது. ஆனால் 2000ம் ஆண்டுக்குப் பிறகு சீனாவுக்கு உலக வங்கி வழங்கிய கடன் தொகை தீவிரமாக குறைந்துள்ளது. சீனா மீதான கொள்கையில் ஏதேனும் மாற்றம் உண்டா?
கேரன்......சீனாவுக்கு வழங்கிய குறைந்த உட்டியுடன் கூடிய நீண்டகாலத்தில் செலுத்த வேண்டிய கடனை சீனா உலக வங்கிக்கு திருப்பி கொடுத்தது என்பது இதன் முக்கிய காரணமாகும். உலக வங்கி கடன் வழங்குவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று சர்வதேச வளர்ச்சி சங்கம் வழங்கும் கடன். இதன் வட்டி குறைவு, திருப்பிச் செலுத்தும் காலம் நீண்டம். இன்னொன்று சர்வதேச வளர்ச்சி வங்கி வழங்கும் கடன். இது கடினமான நிபந்தனைகளைக் கொண்டது. தற்போது சீனா வளமடைந்துள்ளது. குறைந்த வட்டியுடன் கூடிய கடனைப் பெறும் தகுதி சீனாவுக்கு இப்போது கிடையாது. ஆகவே சீனாவுக்கும் உலக வங்கிக்குமிடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு உலக வங்கி கடன் வழங்குபவர் என்ற நிலையிலிருந்து இப்போது கொள்கை தகவல் வழங்கும் நிலைக்கு மாறியுள்ளது. உலக வங்கியிடமிருந்து பெரிய திட்டங்களை எலமுறையில் பெறுவது, திட்டப் பணியை கண்காணிப்பது முதலிய அனுபவத்தை கற்றுக் கொள்ளும் வகையில் சீன அரசாங்கம் உலக வங்கியின் கடனைப் பயன்படுத்த விரும்புகின்றது. இது இல்லை என்றால் சீனா உலக வங்கியிலிருந்து கடன் வாங்க தேவையில்லை.
1 2
|