• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-07 16:37:10    
கடனை கட்டும் நாடுகளில் சீனா சிறந்தநாடு

cri

செய்தியாளர்.....கடன் தொகையை கட்டற்ற முறையில் செலவு செய்யாமல் இருக்க எப்படி உத்தரவாதம் செய்ய முடியும்?
கேரன்......நாங்கள் முதலிலே திட்டம் ஒன்றை உறுதிப்படுத்த வேண்டும். கடனை வழங்கத் தொடங்கும் போது இதை கண்காணிப்பில் வைக்க வேண்டும். நிபந்தனைக்கு மாறாக சில வேளையில் கட்டற்ற முறையில் கடன் தொகை செலவிடப்படும். நிலைமை அவ்வபோது நிகழும். சீனாவைப் பொறுத்தவரை இது வரை இது பற்றிய தகவல் எனக்கு இல்லை. உலகில் அனைத்து நாடுகளிலும் உலக வங்கியின் கடனை சிறந்த முறையில் பயன்படுத்தும் நாடாக சீனா திகழ்கின்றது.
செய்தியாளர்......90ம் ஆண்டுகள் முதல் உலக வங்கியின் பங்கு பணியில் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடன் தரும் வங்கியிலிருந்து அறிவு தரும் வங்கியாக மாறியுள்ளது. இந்த தலைகீழ் மாற்றம் ஏன்?


கேரன்......சீனா உள்ளிட்ட பல நாடுகள் இப்போது சர்வதேச பங்குச் சந்தையில் பணம் கடனாக வழங்க முடியும். உலக வங்கியிடம் கடனுக்காக சார்திருக்கும் அளவு குறைந்துள்ளது. இந்த மாற்றத்துக்கு ஏற்ப உலக வங்கி தன் செயல் திறனையும் பங்கையும் படிப்படியாக சீர்ப்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலக வங்கி உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களுக்கு பயனுள்ள தகவல்களை வழங்குவதில் மென்மேலும் கவனம் செலுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, நடுத்தர மற்றும் சிறிய ரக தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு உதவி செய்ய வேண்டும். இதற்கான கொள்கையை எப்படி சரிப்படுத்த வேண்டும் என்பது போன்ற தகவல்களை சில நாடுகள் உலக வங்கியிடமிருந்து அறிந்து கொள்ள வேண்டும். இந்த நிலைமையில் இந்த துறையில் மற்ற நாடுகளின் அனுபவம் பற்றிய தகவலை உலக வங்கி அந்த நாடுகளுக்கு தெரிவிக்கலாம். அதேவேளையில் முன்மொழிவுகளையும் முன்வைக்கும்.


1  2