• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-08 19:11:25    
Yao இனத்தின் ஒரு பிரிவான Bai Ku Yao

cri

அடர்த்திய மலைகளில் வசிக்கும் Bai Ku Yao இன மக்கள் உருவாக்கிய சந்தை தனித்தன்மை வாய்ந்தது. பொதுவாக பகல் சந்தை எனவும், இரவு சந்தை எனவும் பிரிக்கப்படுகின்றது. பகலில், முக்கியமாக, பொருள் பரிமாற்றம் நடைபெறுகிறது. இரவிலோ, உணர்ச்சிப்பரிமாற்றம் நிகழ்கிறது. அவர் கூறியதாவது:

சந்தைக்குச் செல்வது என்பது, இங்கு வாழும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு தடவையும், அனைவரும் சொந்தமாக தயாரிக்க எழிலான ஆடைகளை அணிந்து, 5 கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான இடத்திலிருந்து வட்டம் செல்வார்கள். பகலில் மட்டுமல்ல, இரவிலும் அப்படியே. இரவுச் சந்தை, முக்கியமாக, இளம் ஆண்-பெண் தொடர்பு கொள்ளும் இடமாகத் திகழ்கின்றது.

பகல் சந்தையில், Bai Ku Yao இனத்தவர், தத்தம் வீடுகளிலிருந்து கொண்டு வந்துள்ள பொருட்கள், அரிசி மது, காய்கறிகள், பழவகைகள் முதலியவற்றை விற்கலாம். நீண்ட நாட்களில் சந்திக்காத பழைய நண்பர்களைச் சந்தையில் சந்தித்து உணர்ச்சிவசப்படுவார்கள். சந்தையில் உலா வரும் போது, பொருள் வாங்குவதற்காக மட்டும் இங்கு வருவதில்லை. இன்பத்தை நாடியும் வருகிறார்கள் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

பகல் சந்தையில் காணப்படும் பரபரப்பை விட, இரவுச் சந்தையில் அன்பின் பிரதிபலிப்பு அதிகமாகத் தெரிகிறது. இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாக சேர்ந்து பாடுவதன் மூலம் ஒருவர் மீது ஒருவர் காதல் உணர்வை வெளிப்படுத்துகின்றனர். வழக்கமாக ஒரு பாட்டு பாடியதும், இருவரும் காதலன் காதலிகளாக மாறிவிடுகின்றனர். Lu Cheng Zhoong உம் அவரது மனைவி Lu Xiao Meiஉம் இம்முறையிலே திருமணம் செய்தனர். பத்து ஆண்டுகளுக்கு முன் இரவுச் சந்தையிலே இருவரும் சேர்ந்து பாடிய பிறகு நெருங்கிப் பழகி இறுதியில் மணம் புரிந்து கொண்டனர்.

1  2  3