• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-08 19:11:25    
Yao இனத்தின் ஒரு பிரிவான Bai Ku Yao

cri

தற்போது, Lu Xiao Meiக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருப்பினும் பார்ப்பதற்கு அவள், இன்னமும் இளமையாகவும் அழகாகவும் காணப்படுகின்றார். அவள் அதிகமாக பேசுவதில்லை. ஆனால், கிராமத்தில், ஆடை தயாரிப்பில் தேர்ச்சி பெற்றவர். வீட்டில் எழிலான ஆடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவளுடன் நெருங்கிப் பழகும் பயணிகளுக்கு அவள் ஆடைகளை விற்பார். பெரும்பாலான நேரத்தில், தனது குழந்தைகளை அழகான ஆடைகளைச் அணியச் செய்திடுகிறார். இப்போது துவக்கப்பள்ளியில் கல்வி பயிலும் அவரது மகள் அணிந்துள்ள சில அழகான உடுப்புகள் அவராலேயே தயாரிக்கப்பட்டவை.

Nian Gao Shu என்ற மரம், Bai Ku Yao இனத்தவர் குவிந்துவாழும் பிரதேசத்தில் வளரும் ஒரு வகை மரமாகும். ஆடை தயாரிப்பதற்கு இது இன்றியமையாத பொருள். ஒரு இடத்தில் Bai Ku Yao இனத்தவர் எவ்வளவு அதிகம் குழுமிவாழ்கின்றனவோ, அவ்வளவு அதிகமான இத்தகைய மரங்கள் வளர்கின்றன. அன்றி, இம்மரங்கள் பெரிதாகின்றன. முன்பு, இதர இடங்களில் இந்த மரங்களை நட்டுவளர்க்க சிலர் முயற்சித்தனர். இருப்பினும் தோல்வியடைந்தனர். இம்மரங்கள் Bai Ku Yao இனத்தவரின் பொழியை மட்டுமே புரிந்து கொள்கின்றன. இல்லாவிடில் வேறிடத்தில் வளராது போலும். இது வரையிலும், இம்மரத்தின் பெயரை கண்டுபிடிக்க தாவர இயலாளர்களால் முடியவில்லை. 

காலநிலை சீரான நேரத்தில், கிராமத்தின் பெண்கள் மலைகளிடையே பாயும் சிறு ஆறுகளில் ஆடைகளைத் துவைப்பார்கள். அப்போது, எந்த குடும்பத்தில் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. யார் யாருடன் சேர்ந்து பாடி தம்பதிகளாயினர் போன்ற செய்திகள் அவர்கள் மூலம் பரவி விடும்.

Bai Ku Yao இனக்குடியிருப்பிடங்களில், தாய் வழி சமூகத்திலிருந்து தந்தை வழி சமூகத்துக்கு மாறிச்செல்லும் சமூக பண்பாட்டு முறை இன்னமும் காணப்படுகின்றது. எனவே, சமூகத்தின் பல்வேறு துறைகளின் முயற்சியுடன், Man Jiang Yao இன கிராமத்தில் உயிரின வாழ்க்கைச்சூழல் பற்றிய அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள தனித்துவம் வாய்ந்த பழக்க வழக்கங்களைப் பராமரிப்பது அதன் நோக்கமாகும். Bai Ku Yao இனத்தவரின் எண்ணிக்கை, 30 ஆயிரத்துக்கும் மேலானது. அவர்களில் பெரும்பாலானோர், அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கின்றனர். இப்போது, இங்கு பயணம் மேற்கொள்ள பலர் விரும்புகின்றனர். சில இளைஞர்கள் கிராமத்தை விட்டு வெளியே போய் பணி புரியத் துவங்கினர். பல நூறு ஆண்டுகளாக பரவி வரும் பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் நீங்கி விட்டன. இருப்பினும் சிலது தொடர்கின்றன. Lu Cheng Zhong கதவில் வைக்கோல் போடப்பட்டுள்ள ஒரு குடும்பத்தைச் சுட்டிக்காட்டினார். வைக்கோல் தென்பட்டால், இக்குடும்பத்தில் நோயாளி இருக்கின்றார் அல்லது விபத்து நிகழ்ந்தது என்பதை குறிக்கின்றது. இந்நாளில் எவரும் அவரது வீட்டிற்குள் நழைய முடியாது என்றார் அவர். இத்தகைய பண்டைய அடையாளம் கிராமத்தில் இது வரையிலும் நிலவுகின்றது என்று Lu Cheng Zhong தெரிவித்தார்.


1  2  3