• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-11 22:29:01    
சீனாவின் முஸ்லிம் உணவு

cri

வேய் இன குழந்தைகள்

சீனாவின் பேரங்காடிகளில் அல்லது சில சிறப்பு விற்பனை பகுதிகளில், பச்சை நிற நட்சத்திரம் பிறைநிலாப் படங்களும் அல்லது குரான் திருமறையின் அடையாளமும் பொறிக்கப்பட்ட உணவுப்பொருள் பொட்டலங்கள் அடிக்கடி காணப்படுகின்றன. சீனாவில் உள்ள இரண்டுகோடியே பத்து லட்சம் முஸ்லிம் மக்களின் உணவு விருப்பத்துக்காகவே அவை தயாரிக்கப்படுகின்றன. இவ்வுணவுப்பொருட்களின் உற்பத்தி நிர்வாகத்தை வரையறைப்படுத்துவதற்காக, சீனாவின் தொடர்புடைய வாரியம், "முஸ்லிம் உணவுப்பொருள் நிர்வாக விதிகள்" உள்ளிட்ட சட்டவிதிகளை வகுத்து வருகின்றது.

சீனாவின் 56 தேசிய இனங்களில், வேய், விகுர், கஜக்ஸ்தான் முதலிய பத்து சிறுபான்மை தேசிய இனங்கள், இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகின்றன. இவர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் உணவுப்பொருட்களின் தெரிவு, உற்பத்தி, பதனீடு ஆகியவற்றின் மீது சீன முஸ்லிம்கள் சிறப்பு சலுகைகளைக் கோருகின்றனர். சிறுபான்மை தேசிய இன விவகார நிர்வாகப் பணிக்குப் பொறுப்பான சீன தேசிய இன விவகாரக்கமிட்டியின் அதிகாரி Jin Chun Zi அம்மையார், சீனாவில் எப்படிப்பட்ட உணவை, முஸ்லிம் உணவாகக் கூறமுடியும் என்பது பற்றி திட்டவட்டமாக விளக்கிக்கூறினார்:

1  2