உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு பணிக்குப் பொறுப்பான சீன அரசு வனத் தொழில் பணியகத்தின் தலைவர் சோ சென் சியென் கூறியதாவது "சதுப்பு நிலம், காடு, கடல் ஆகியவை பூகோளத்திலுள்ள மூன்று பெரிய உயிரின வாழ்க்கை சூழல் அமைப்புகள் என அழைக்கப்படுகின்றது. சதுப்பு நிலமானது நீர் வளத்தைப் பாதுகாப்பது, நீரைத் தூய்மைப்படுத்துவது வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்தி வற்சியைத் தடுப்பது, கால நிலையை சரிப்படுத்துவது பல்வகை உயிரினங்களைப் பேணிக்காப்பது முதலிய முக்கியமான சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பணிகளைச் செய்யும் திறனைக் கொண்டுள்ளன."பூகோளத்தின் சிறு நீரகம்"எனவும் மரமணுக்களின் களஞ்சியம் எனவும் புகழ்ந்து போர்றப்படுகின்றது. சீரான சதுப்பு நில உயிரின வாழ்க்கை சூழல் அமைப்பானது நாட்டின் உயிரின வாழ்க்கை சூழல் பாதுகாப்பு, முறைமையின் முக்கியமான பகுதியாகவும் பொருளாதார சமூகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியின் முக்கிய அடிப்படையாகவும் திகழ்கின்றது " என்றார் அவர்.
1 2