சீனா சதுப்பு நிலங்கள் வளமிக்க நாடுகளில் ஒன்றாகும். சீனாவில் சுமார் 3 கோடியே 60 லட்சம் ஹேக்டர் சதுப்பு நிலங்கள் உண்டு. இது உலகில் 4வது இடம் வகிக்கிறது. சிங்காய்-திபெத் பீடப்பூமி, தெந் மேற்கு சீனாவின் யுநான் மாநிலம், குய் சோ மாநிலம், யாங்சி ஆர்று நடுத்தர மற்றும் கீழ் பகுதிகள் ஆகிய மூன்று பிரதேசங்களில் இவை அமைந்திருக்கின்றன. முதல் இரண்டு மாநிலங்களில் மனிதக் குலத்தின் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி, சதுப்பு நிலங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பல இயற்கை புகலிடங்களை சீனா உருவாக்கியுள்ளது. இம்முறை மக்கள் தொகை நெருக்கமாக உள்ள யாங்சி ஆற்றின் நடுத்தர கீழ் பகுதிப் பிரதேசங்களில் மேற்கொல்ள முடியாது என்பது தெளிவு.

சதுப்பு நிலத்தின் பாதுகாப்புக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே உள்ள நோதலைத் தீர்க்கும் பொருட்டு 1999ம் ஆண்டு முதல் சீன அரசு புகழ் பெற்ற சர்வதேச சூழல் பாதுகாப்பு நிறுவனமான உலக இயற்கை நிதியத்துடன் ஒத்துழைத்து யாஹ்சி ஆற்றின் நடுத்தர மர்றும் கீழ் பகுதி பிரதேசங்களில் முற்றிலும் புதிய ரக சதுப்பு நில பாதுகாப்பு மாதிரியான ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் ஒட்டுமொத்த நிர்வாக முறையை பலிசோதனை முறையில் துவங்கியுள்ளது. ஹுபெய் ஹுநான் ஆகிய இரு மாநிலங்களில் முறையே ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்தது. இதற்கு முன் இவ்விரு கிராமத்து விவசாயிகள் அருகிலுள்ள சதுப்பு நிலங்களை கைபற்றி சாகுபடி செய்தனர். இவற்றில் தானியங்களைப் பயிரிட்டதினால் சதுப்பு நிலங்களின் பரப்பளவு பெரிதும் குறைந்தது. வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் வகைகளும் எண்ணிக்கையும் பெரிதும் குறைந்தன., அதிலும் சதுப்பு நிலத்தின் நீர் தூய்மை கேடும் கடுமையாக இருந்தது.
சீனாவிலுள்ள உதலக இயற்கை நிதியத்தின் அதிகாரி லீ லி புங் இவ்விரு பரிசேதனை திட்டப் பணிகளுக்குப் பொருப்பாளர்.

"ஆரம்பத்தில் மிகவும் சிரமமாக உள்ளது. ஏனென்றால் முதலில் அவர்களின் கருத்தை மார்ற வேண்டும். பன்றி, கோழி, வாத்துக்களை வளர்க்க முதலில் சில விவசாயி குடும்பங்களுக்கு நிதி உதவி வழஹ்கினோம். அவர்களுக்கு வழிகாட்ட சில வேளாண் துறை நிபுணர்களையும் வரவழைத்தோம். நாங்கள் உரம் வழங்கும் வேளாண் துறை மாதிரிகளை சிறப்பாக ஆதரித்துப் போசினோம்"என்றார் அவர்.
விவசாயிகளிடமிருந்து ஆதரவைப் பெறும் பொருட்டு, விவாயிகளுக்கு சதுப்பு நில பாதுகாப்பு பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. சீனாவிலுள்ள உலக இயற்கை நிதியத்தின் பிரதிநிதி ஹௌ க் மின் கூறியதாவது "சதுப்பு நில தூதர் நடவடிக்கையை நாஹ்கள் மேற்கொண்டோம். பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பிரச்சார நடவடிக்கைகளி முக்கியமாக கலந்து கொள்கின்றனர். கோடை விடுமுறையில் அவர்கள் சதுப்பு நில பிரதேசங்களுக்கு வந்து இங்குள்ள மக்களிடையே பிரச்சாரம் செய்கின்றனர்"எந்றார் அவர். இவ்விரு மாநிலங்களில் சதுப்பு நிலப் பாதுகாப்பு சோதனை பணி நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. கிராமங்கள் தெளிவான உயிரின வாழ்க்கை சூழல் மற்றும் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பயனைப் பெற்றுள்ளன. நெல் பயிரிடப்பட்ட சதுப்பு நிலங்களில் மீண்டும் ஆற்று நீர் பாய்ச்சி மீன் மற்றும் பறவைகளின் சுவர்க்கமாக மாறியுள்ளன. விவசாயிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. புள்ளிவிபரங்களின் படி இவற்றில் நீர் வாழ் தாவரங்கள் மற்றும் பறவைகளின் வகைகளில் சுமார் 10 வகைகள் அதிகரித்துள்ளன. விவசாயி குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் 4 மடங்கு அதிகரித்துள்ளது.

ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கான ஒட்டுமொத்த நிர்வாக முறையை செயல்படுத்துவதன் மூலம் சதுப்பு நிலப் பாதுகாப்பு பொருளாதார வளர்ச்சி இரண்டிலும் வெற்றி பெற முடியும் எனஅபதை நடைமுறைகள் நிரூபித்துள்ளன என்று லீ லி புங் கூறினார். மேலும் கூடுதலான சதுப்பு நிலங்களைப் பயன் தரும் முறையில் பாதுக்கும் பொருட்டு சீனா இவ்வாண்டு முதல் இந்த நிர்வாக முறையை இதர தசுப்பு நிலப் பிரதேசங்களுக்கு பரவல் செய்யும். 1 2
|