ஆள் அரவமற்ற ஒரு தீவு—மலர்களுக்குப் பெயர் பெற்றது. ஆயிரக்கணக்கான மலர்கள் மணம் பரப்பி, ஆண்டு முழுவதும் மலரும்.
ஸங் என்பவர், அங்குப் போய் வருவது என்று தீர்மானித்தான்.
வேட்டையாடுவது, இந்த மாதிரி வித்தியாசமான செயல் செய்வது ஆகியவற்றில் அவனுக்கு ஈடுபாடு அதிகம்.
பூத்துக் கிடக்கும் குவியல் குவியலான பூக்களைக் கண்டான். பரவசத்தில் மூழ்கினான். அப்போது—
மலர்க் குவியலில் இருந்து அழகிய இளம்பெண் வெளியே வருவதைக் கண்டார்.
"இப்படிப்பட்ட அழகியை இதுவரை பார்க்கவில்லை" என்று புகழ்பாடினான்.
அவன் சிரித்தான். அவளும் சிரித்தாள்.
"யார் நீ என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டான்.
"பக்கத்து ஊரிலிருந்து எஜமானனுடன் இங்கே வந்தேன். அவர் சுற்றிப் பார்த்து வரப் போயிருக்கிறார். கால்வலி, அதனால் என்னால் போக முடியவில்லை" என்று பதில் கூறினாள்.
தனிமையில் தவித்தவனுக்கு, இளம்பெண் கிடைத்ததில் மகிழ்ச்சி.
"இந்த மதுவை அருந்தி, ருசி பார்" என்று நீட்டினான்.
அவளும் வாங்கிப் பருகினாள்.
எந்த விதமான பந்தாவும் காட்டாமல் அவள் பழகியது—பேசியது—அவனுக்குப் பிடித்துப் போயிற்று.
எஜமானன் வருவதற்குள் அவளை முழுமையாக அனுபவித்துவிட்டால் என்று நினைத்தவன், அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவளும் மறுக்கவில்லை.
இன்பத்தின் உச்ச கட்டத்தில் இருவரும் இருந்த போது—
சுழற்காற்று அடித்தது. செடிகளும் மரங்களும் பலமாக அசைந்தாடின.
"சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். என் எஜமானர் வருகிறார்" என்று அவனை அவசரப்படுத்தினாள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
1 2
|