எழுந்து நாலாபக்கமும் பார்த்தான். யாரும் வரவில்லை. அப்போது—
அந்தப் பெண் காணாமல் போனாள்.
ஆனால்—
அங்கே புதிதாக, பெரிய பாம்பு ஒன்று வந்து நின்றது.
பீப்பாய் அளவுக்கு இருந்த அதன் உடம்பைக் கண்டு அவன் நடுங்கி விட்டான்.
பெரிய மரத்தின் பின்னால் போய் ஒளிந்து கொண்டான்.
பாம்பு விடுவதாக இல்லை. மரத்தோடு சேர்த்து அவன் உடம்பைச் சுற்றிக் கொண்டது.
தலையை உயர்த்தி, அவனது மூக்கில் நாக்கை நுழைத்தது. இப்போது—
மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. தரையில் விழுந்த அந்த மனித ரத்தத்தை, பாம்பு குடித்தது.
"நேரம் வந்து விட்டது" என்று அவன் மரணத்தை எதிர்நோக்கினான். அப்போது—
விஷம் வைத்து மடிக்கப்பட்ட பொட்டலம், அவனது இடுப்பில் இருப்பது நினைவுக்கு வந்தது.
இரண்டு விரல்களை நுழைத்து, ஒருவழியாக அந்தப் பொட்டலத்தை எடுத்தான். அதைக் கிழித்து, தன் உள்ளங்கையில் விழுமாறு கொட்டினான்.
உள்ளங்கையில், விஷம் உள்ள இடத்தில், ரத்தம் விழுமாறு, கழுத்தை உயர்த்தினான்.
அவன் எதிர்பார்த்தது போலவே உள்ளங்கையில் இருந்த ரத்தத்தை அந்தப் பாம்பு குடித்தது. உடனே பொத் என்று தரையில் சாய்ந்தது.
அதன் வால் வீசிய வேகத்தில், அவன் இருந்த மரம் இரண்டாகப் பிளந்தது.
அவன் சமாளித்து எழுவதற்குச் சிறிது நேரம் பிடித்தது.
செத்த பாம்பைத் தோளில் போட்டுக் கொண்டு, அவன் வீடு திரும்பினான்.
ஒரு மாதம் வரை அவன் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.
மலராகி வந்தவள்தான் அந்தப் பாம்பு என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. 1 2
|