
முஸ்லிம் உணவுப்பொருளின் உற்பத்தியை மேலும் முறைப்படுத்துவதற்காக, சீனாவில், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே முஸ்லிம் உணவுப்பொருள் உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் உணவு உற்பத்திக்கான உரிமத்தை சீன அரசு வழங்குகின்றது. ஒருமித்த முறையில் நிர்வாகம் நடைபெறுகின்றது. தற்போது, சீனாவில் சுமார் இத்தகைய 350 தொழில் நிறுவனங்கள், முஸ்லிம் உணவுப்பொருட்களின் பதனீடு மற்றும் உற்பத்தியில் ஈடுபடுகின்றன.

பெய்சிங் மாநகரிலுள்ள Gun Xiang Cun முஸ்லிம் உணவுப்பொருள் நிறுவனத்தின் கடைகளில், வெவ்வேறு வகையான சிற்றுண்டிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன. சீன முஸ்லிம்கள் விருப்பிச் சாப்பிடும் பாரம்பரிய சிற்றுண்டிகளையும், மேற்கத்திய சிற்றுண்டிகளையும் இக்கடையில் வாங்க முடியம். இந்த நிறுவனத்தின் தலைமை மேலாளர் He Feng Zhuo ஒரு முஸ்லிம் ஆவார். அவரது குடும்பம் நூறு ஆண்டுகளுக்கு மேல் பெய்சிங்கில் முஸ்லிம் உணவுப்பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இவ்வுணவுப்பொருட்கள் கண்டிப்பான விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு உணவுப்பொருளின் தரம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. அவர் கூறியதாவது:
"உணவுப்பொருள் உற்பத்தியில், மூலப்பொருள் வாங்குதல், அவற்றைத் தேர்ந்தெடுத்தல், உற்பத்தி முறை, விற்பனை ஆகியவற்றில் நாங்கள் மிகுதியும் கவனம் செலுத்துகிறோம். தேசிய இனக்கொள்கைக்கு மட்டுமல்ல, வேய் இன மக்களின் பழக்க வழக்கங்களுக்கு பொருந்தியதாக செயல்பட வேண்டும். வேய் இன மக்கள் உண்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள பொருட்கள் எதையுமே நாங்கள் வாங்குவதில்லை. இவ்விதி கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது" என்றார் அவர்.
1 2
|