• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-15 16:53:36    
முஸ்லிம் உணவு வகைகள் கிடைப்பதற்கு உத்தரவாதம்

cri

மிகப்பல முஸ்லிம்கள் உணவுப்பொருட்களை வாங்குவதற்கு வசதியாக சீனாவின் பல்வேறு இடங்களில் சிறப்பு கடைகளும் பேரங்காடிகளும் உள்ளன. எமது செய்தியாளர் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், இத்தகைய பேரங்காடி ஒன்று உள்ளது. அது அவ்வளவு பெரிய கடை இல்லை என்ற போதிலும் முஸ்லிம் உணவுப்பொருட்கள் ஏராளமாக விற்கப்படுகின்றன.

இக்கடையில் பொருள் வாங்குகின்ற, மத்திய தேசிய இனப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் Dong Xiang இன மாணவர் Tang Zhan Haiஐ செய்தியாளர் சந்தித்தார். Dong Xiang இனம், சீனாவில் இஸ்லாமிய மத நம்பிக்கை கொள்ளும் பத்து சிறுபான்மை தேசிய இனங்களில் ஒன்றாகும். அதன் 4 லட்சம் மக்களில் பெரும்பாலானோர், வட மேற்கு சீனாவின் Gan Su மாநிலத்து Dong Xiang இனத் தன்னாட்சி மாவட்டத்தில் குவிந்து வாழ்கின்றனர். Tang Zhan Hai அவ்விடத்தைச் சேர்ந்தவர். அவர் பெய்சிங்கில் சுமார் 7 அண்டுகாலம் வாழ்ந்து வருகின்றார். தமது பெய்சிங் வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:

"பெய்ஜிங்கில், முஸ்லிம் உணவுப்பொருளை வாங்குவது சிரமமில்லை. வேய் இன மக்கள் கூடிவாழும் பிரதேசங்களில் நிறைய கிடைக்கின்றன. தெருக்களில் முஸ்லிம் உணவு விடுதிகள் அதிகமாக இருக்கின்றன. எனவே, பெய்சிங் மாநகரில் முஸ்லிம் உணவுப்பொருளை உட்கொள்வது இன்னலில்லை. மேலும், அவை தரமானவையாகவும் உள்ளன" என்றார் அவர்.

முஸ்லிம் உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையை மேலும் முறைப்படுத்தும் வகையில், சீனாவின் தொடர்புடைய வாரியம், "முஸ்லிம் உணவுப்பொருள் மீதான நிர்வாக விதிகள்" வரையத் துவங்கியுள்ளன. இதற்கு முன், 2004ம் ஆண்டின் இறுதி வரை, சீனாவின் பெய்சிங் மாநகரம், Shan Xi மாநிலம் உள்ளிட்ட 19 மாநில நிலை நிர்வாகப்பிரதேசங்களிலும், சில பெரிய நடுத்தர நகரங்களிலும் உள்ளூர் முஸ்லிம் உணவுப்பொருள் மீதான நிர்வாக விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

இவ்விதிகளை வரைவதில் கலந்து கொண்ட அதிகாரி Jin Chun Zi அம்மையார் பேசுகையில், நாடு தழுவிய இச்சட்டவிதிகளை வகுப்பது, பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கூறினார். 2005ம் ஆண்டில் சட்டமியற்றல் பணியை வலுப்படுத்தி, இவ்விதிகள் வெகு விரைவில் வெளியிடச்செய்திடுவோம்" என்றார் அவர்.


1  2