• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-18 17:44:15    
சீனாவில் தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி

cri

சிறுபான்மை தேசிய இன குழந்தைகள்

சீன அரசு அவையின் செய்தி அலுவலகம் "சீனாவின் தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி" என்ற வெள்ளை அறிக்கையை அண்மையில் வெளியிட்டது. சீனாவில் தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி நடைமுறைக்கு வந்த கடந்த 50 ஆண்டுகளில் பெறப்பட்டுள்ள நடைமுறை அனுபவம் மற்றும் சாதனையை அறிக்கை பலவகைகளிலும் விளக்குகிறது. செய்தியாளருக்குப் பேட்டி அளித்த, சிறுபான்மை தேசிய இன பிரமுகர்கள், சீனாவின் தேசிய இனப் பிரதேச தன்னாட்சி முறைமை, பல்வேறு சிறுபான்மை தேசிய இனப் பிரதேசப்பொருளாதார உற்பத்தி, கல்வி, பண்பாடு முதலிய துறைகளின் வளர்ச்சியைப் பெரிதும் விரைவுபடுத்தியுள்ளது என்று கூறினார்கள்.

சீனா, பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாடு, நாட்டின் 130 கோடி மக்கள் தொகையில், ஹான் இனத்தின் மக்கள் தொகை, மிக அதிகம். மொத்த மக்கள் தொகையில் 91 விழுக்காடு வகிக்கின்றது. ஹான் இனம் தவிர 55 தேசிய இனங்கள் இருக்கின்றன. அவர்களின் மக்கள் தொகை, 9 விழுக்காடு வகிக்கின்றது. எனவே, இந்த 55 தேசிய இனங்கள், சீனாவின் "சிறுபான்மை தேசிய இனங்கள்" என அழைக்கப்படுகின்றன. கடந்த 50ம் ஆண்டுகள் முதல், சீனா, தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி மூலம் தேசிய இன விவகாரங்களை நிர்வகிக்கத் துவங்கியுள்ளது.

1  2