• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-18 17:44:15    
சீனாவில் தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சி

cri

சிறுபான்மை தேசிய இன மகளிர்

சீனாவின் 34 மாநில நிலை நிர்வாகப்பிரதேசங்களில் 5 பிரதேசங்கள் சிறுபான்மை தேசிய இனத் தன்னாட்சிப் பிரதேசங்களாகும். இந்த 5 தன்னாட்சிப் பிரதேசங்கள் தவிர, இதர சில மாநில நிலை நிர்வாகப் பிரதேசங்களில் எண்ணற்ற சிறுபான்மை தேசிய இனத் தன்னாட்சி வட்டாரங்களும், தன்னாட்சி மாவட்டங்களும் நிறுவப்பட்டுள்ளன. வெவ்வேறான சிறுபான்மை தேசிய இன மக்கள், சொந்த இனத்தவர் கூடிவாழும் பிரதேசங்களில் போதிய அளவில் தன்னாட்சியை நடத்துகின்றனர். தற்போது, சீனாவில் தேசிய இனத் தன்னாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்து பரப்பளவு, நாட்டின் நிலப்பரப்பில் 50 விழுக்காட்டுக்கு மேலானது.

சிறுபான்மை தேசிய இன மகளிர்

"அரசியல் அமைப்புச் சட்டம்" "தேசிய இனப் பிரதேசத் தன்னாட்சிச் சட்டம்" ஆகியவற்றின் படி, பல்வேறு சிறுபான்மை தேசிய இனப் பிரதேசத்து உச்ச நிர்வாக அதிகாரிகள், உள்ளூரில் முக்கிய தேசிய இனத்தைச் சேர்ந்த வராக இருக்க வேண்டும். சட்டமியற்றல், பொது பாதுகாப்பு மற்றும் அரசு வழக்கறிஞர் வாரியங்கள் உட்பட, இதர பல்வேறு நிலை அதிகார நிறுவனங்களிலும் அதிக எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனத்தவர் முக்கிய பதவி வகிக்கின்றனர்.


1  2