• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-19 09:48:01    
பாதுகாக்கக் கூடிய குளிர் பதனப் பெட்டி

cri
குளிர் பதனப் பெட்டி இன்று சீன மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. இருப்பினும் அதன் பரவலான பயன்பாட்டினால் பொருவாரியான மின்சார செலவும் கார்பண்டை ஆக்ஸைடு உள்ளிட்ட வெப்ப வாயுவின் வெளியேற்றமும் அதிகரித்துள்ளன. இப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு சீனா கடந்த சில ஆண்டுகளாக மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த கூடிய சுற்று சூழல் பாதுகாப்பு குளிர் பதனப் பெட்டியை ஊக்கத்துடன் தயாரித்து வழங்குகின்றது. இத்தகைய குளிர் பதனப் பெட்டி சீன நுகர்வோரின் வரவேற்பை மேன்மேலும் பெற்று வருகின்றது. சியெந் சான் சியா எனும் பெண்மணி ஒருவர் அண்மையில் புதிய குளிர் பதனப் பெட்டியை வாங்கினார். அவர் எங்கள் செய்தியாளரிடம் கூறியதாவது

 "எங்கள் புதிய குளிர் பதனப் பெட்டி எழில் மிக்கது. தவிரவும் அது மின்சாரத்தைச் சிக்கனப்படுத்துவதுடன் சுற்று சூழலுக்குப் பாதுக்காப்பாகவும் உள்ளது. இது மிகவும் நல்லது. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் அதை மிகவும் விரும்புகிறோம்" என்றார் அவர்.

சியென் சான் சியாவின் புதிய குளிர் பதனப் பெட்டியின் கொள் அளவு 208 லிட்டராகும். அது நாள்தோறும் மணிக்கு 0.5 கிலோவாட் மின்சாரத்தைச் செலவிடுகின்றது. இது பழைய குளிர் பதனப் பெட்டியை விட பாதியளவு மின்சாரச் செலவை குறைத்துள்ளது. மின்சாரக் கட்டணமும் சிக்கனப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

1  2