• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-19 09:48:01    
பாதுகாக்கக் கூடிய குளிர் பதனப் பெட்டி

cri

தற்போது சீனச் சந்தையில் விற்பனையாகும் பெருவாரியான குளிர் பதனப் பெட்டிகள் அவர் வாங்கியது போல் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தக் கூடிய சுற்று சூழல் பாதுகாப்பு குளிர் பதனப் பெட்டிகளாகும். சீன அரசு சுற்று சூழல் பாதுக்காப்பு தலைமை பணியகத்தின் அதிகாரி சொன் சியௌ ச்சி அம்மையார் கூறியதாவது "சீன அரசாங்கம் சுற்று சூழல் பாதுகாப்புக்கு பெரும் முக்கியத்துவ் அளிக்கின்றது. வீட்டுப் பயன்பாட்டுக்கான குளிர் பதனப் பெட்டியின் மின்சார சேமிப்பை உயர்த்தி மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தக் கூடிய குளிர் பதனப் பெட்டியின் பயன்பாட்டுக்கு ஊக்கமளிப்பது அதன் உருப்படியாக நடவடிக்கையாகும். இப்படிச் செய்வது பெரும் பொருளாதார மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு நலனை விளைவிக்கும் அதேவேளையில் பெரும் சமூக நலனையும் ஏற்படுத்த முடியும்" என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளில் சீனச் சந்தையில் ஆண்டுதோறும் ஒரு கோடியே 40 லட்சம் குளிர் பதனப் பெட்டிகள் விற்பனையாகின்றன. சமூகத்தின் கொள் அளவு இதை விட மேலும் பெரிதும். கடந்த நூற்றாண்டின் இறுதியில் சீனாவின் குளிர் பதனப் பெட்டிகளின் எண்ணிக்கை மற்றும் மின்சாரச் செலவை கணக்கிட்டால் எல்லாக் குளிர் பதனப் பெட்டிகளின் 10 ஆண்டுகால பயன்பாட்டின் படி மணிக்கு சுமார் 60 ஆயிரம் கோடி கிலோவாட் மின்சாரம் செலவிடும். ஆண்டுதோறும் 6 கோடி டன் கார்பன்டை ஆக்ஸைடு வாயு வெளியேற்றப்படும்.

மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி சுற்று சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு சீன அரசாங்கம் 1998ம் ஆண்டு மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தக் கூடிய சுற்று சூழல் பாதுகாப்பு குளிர் பதனப் பெட்டிகளின் தராயிப்பை ஊக்கத்துடன் ஆதரிக்க துவங்கியது.

 

இப்பணி துவங்கியது முதல் அமைப்பாளர்கள் முக்கியமாக இரண்டு துறைகளில் செயல்பட துவங்கியுள்ளனர். ஒன்று தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்ப பரவல் நடவடிக்கைகளையும் மற்றது விற்பனை துறைக்கான சந்தை பரவல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். செய்தி ஊடகங்கள் மூலம் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தி சுற்று சூழலை பாதுகாப்பதற்கான தகவல்களை பரந்தளவில் பிரச்சாரம் செய்து சமூகத்தில் இதற்கான சிறந்த சூழ் நிலையை உருவாக்கியுள்ளனர்.

இதன் விளைவாக சீனாவின் முக்கிய குறிப் பதனப் பெட்டி உற்பத்தி நிறுவனங்கள் பெருவாரியான இத்தகைய குளிர் பதனப் பெட்டிகளை உற்பத்தி செய்ய துவங்கியுள்ளன. சீனாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனமான ஹைல் குழுமம் உற்பத்தி செய்த குளிர் பதனப் பெட்டிகள் அனைத்திலும் FREON இல்லாத காற்று அழுத்த பொறி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. அதன் மின்சாரச் செலவும் பாதியளவு குறைக்கப்பட்டுள்ளது. இக்குழுமத்தின் சந்தை பகுதியின் பொறுப்பாளர் கொங் சென் சியென் கூறியதாவது  "ஹைல் குழுமம் குளிர் பதனப் பெட்டியின் ஆராய்ச்சி தயாரிப்பு மற்றும் விற்பனை முதல் விற்பனைக்குப் பிந்திய சேவையில் மின்சாரத்தை சிக்களப்படுத்துவது மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு பணிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது. தற்போது எங்கள் குளிர் பதனப் பெட்டியில் பயன் மிக்க INVERTER AIR COMPRESSOR பயன்படுகின்றது" என்றார் அவர்.

தற்போது இக்குழுமம் தயாரித்த சாதாரண குளிர் பதனப் பெட்டியின் மின்சார செலவு 0.7 டிகிரி கீழே உள்ளது. இது மட்டுமல்ல சீனாவின் பத்துக்கு மேலான குளிர் பதனப் பெட்டி தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் தயாரித்த குளிர் பதனப் பெட்டிகள் பெரும்பாலும் அரசாங்கத்தின் கோரிக்கையை எட்டியுள்ளன.

புதிய வகை குளிர் பதனப் பெட்டிகளை பரவல் செய்யும் வகையில் சீனாவின் குளிர் பதனப் பெட்டி தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு கண்டிப்பான முறையில் பயிற்சி அளித்துள்ளன.

மா கைய் நின் என்பவர் பெய்சிங்கிலுள்ள ஒரு மின்சார பயன்பாட்டுப் பொருள் விற்பனைக் கடையின் விற்பனையாளர். கடந்த ஆண்டு மே திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை அவர் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தக் கூடிய ஆயிரம் குளிர் பதனப் பெட்டிகளை விற்றார். சுற்று சூழல் பாதுகாப்பு கடமை என்பது தமது முயற்சிக்கு உந்து ஆற்றலாக திகழ்கின்றது என்று அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது

"மனித குலம் உயிர் பிழைக்கத் தேவையான எரி ஆற்றல் குறைந்து வருகின்றது. பாரம்பரிய எரி ஆற்றலினால் ஏற்பட்ட சுற்று சூழல் தூய்மை கேடு நாம் வாழும் சுற்று சூழலுக்கு சொல்லோனான தீங்கை விளைவித்துள்ளது. இதை நினைக்கும் போதெல்லாம் மின்சாரத்தைச் சிக்கனப்படுத்தக் கூடிய குளிர் பதனப் பெட்டி ஒன்றை விற்பனை செய்ய முடிந்ததை பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன்"என்றார் அவர்.

அரசாங்கம் தொழில் நிறுவனங்கள் விற்பனை வணிகர் ஆகியோரின் கூட்டு முயற்சினால் சீன நுகர்வோர் இத்தகைய குளிர் பதனப் பெட்டியை மேன்மேலும் விரும்புகின்றனர். தற்போது அதன் விற்பனை அளவு மொத்த விற்பனை அளவில் சுமார் 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது.


1  2