• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Friday    Jun 20th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-22 15:50:34    
அழகான நிர்வாகஸ்தர் சு சியின் லை

cri

சீனாவின் திரைப்படம் மற்றும் தொலைகாட்சி அரங்கில், சு சியின் லை மிகவும் புகழ்பெற்றவர். கடந்த சில ஆண்டுகளில், அவர் நடிகையாக, இருபதுக்குக் கூடுதலான திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்து, நிர்வாகஸ்தராக, இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

30 வயதான சு சியின் லை, 1997ம் ஆண்டில் பெய்ஜிங் திரைப்படக் கல்லூரியில் படிப்பை முடித்தார். அவர் மிகவும் அழகானவர் அல்ல இருந்த போதிலும், அவருடைய இயற்கையான நடிப்பு திறமை ரசிகர்களுக்கு ஆழமான பதிவை ஏற்படுத்துகிறது. 1995ம் ஆண்டில், இளைஞர்களின் உணர்வை வர்ணிக்கும் தொலைக்காட்சி தொடர் நாடகத்தில், ஒரு நகர பெண்ணாக நடித்ததால், சு சியின் லை சீன திரைப்பட மற்றும் தொலைகாட்சி துறையில் இளைய நட்சத்திரமாக மாறியுள்ளார்.

பின்பு, நான்கு நேசக்கதைகள், வசந்தகாலத்துக்கு செல்லும் நிலத்தடி தொடர்வண்டி, நான் உன்னை காதலிக்கிறேன் ஆகிய திரைப்படங்களிலும், பெய்ஜிங் காதல்க்கதை, பி லி புத்தர், காதலை இறுதிவரை நடத்துவோம் ஆகிய தொலைகாட்சி தொடர் நாடங்களிலும் அவர், பல்வேறு வகை பெண்கள் பற்றி படம் இயக்கினார்.

அவரின் கூற்றின் படி, நடிகையாக இருப்பதை விட, அவர் இயக்குநராக நன்றாக பணிபுரிகின்றார். நானும் அப்பாவும், ஒரு அன்னிய பெண் அனுப்பிய கடிதம் ஆகிய திரைப்படங்களை முடித்த பின்பு, மூன்று திரைப்படங்களை இயக்குவார். இதில் ஒன்று பழைய கால நாடகம். ஒன்று அவர் எழுதிய கதை. மற்றது, செப்டம்பர் 11 நிகழ்ச்சிக்கு பிந்திய அமெரிக்கா பற்றி, 10 நாடுகளின் இயக்குநர்களுடன் சேர்ந்து இந்தப்படத்தை இயக்குவார். தற்போது, இந்த மூன்று திரைப்படங்களின் திரைக்கரையை எழுதிக்கொண்டிருக்கிறார். முதலில் எழுதி முடிக்கப்படம் முதலில் எடுக்கப்படும்.

1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040