• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-28 15:22:59    
தாராளமாக சர்க்கரை வள்ளி குழங்கு உட்கொள்வது

cri
கலை.............அப்படியா? மனித உடம்புக்கு நன்மை தருவது தவிர புற்றுநோய் தடுப்பில் இது எந்த வகையில் பயன்படுகினறது என்பதை ஜப்பானிய புற்றுநோய் தடுப்பு ஆராய்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. உங்களுக்கு தெரியுமா?

ராஜாராம்.......தெரியும். சர்க்கரை வள்ளி கிழங்கு சத்து அதிகம் உடையது. மட்டுமல்ல. புற்றுநோய் தடுப்பு உணவு பொருட்களிலும் முக்கியமானது. நீங்கள் சொன்னது சரிதான். ஜப்பானிய அரசு புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சி மையம் வெளியிட்ட 20 புற்றுநோய் தடுப்பு காய்கறிகளின் பட்டியலில் சர்க்கரை வள்ளி கிழங்கு முதலிடம் வகிக்கின்றது. எடுத்துக்காட்டாக மூங்கில் குருத்து, முட்டை கோசு, காலிபிளவர், மிளகாய், கேரத், தக்காளி, பூண்டு முதலிய காய்களின் புற்றுநோய் தடுப்பு திறமை சர்க்கரை வள்ளி கிழங்கில் இருப்பதை விட குறைவு. ஜப்பானிய மருத்துவர்கள் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உணவு பொருட்களைப் பற்றி கள ஆய்வு செய்த பிறகு வேகவைத்தசர்க்கரை வள்ளி கிழங்கிற்கு பச்சை கிழங்கை விட புற்று நோய் தடுப்பு திறன் அதிகம் என்று கண்டறிந்துள்ளனர். சீனாவில் மருத்துவ ஊழியர்கள் சீனாவின் குவாடஞ்சி சுவான் இன பிரதேசத்தின் மேற்கில் நூறு வயது முதியோர் வாழ்கின்ற வட்டாரத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பின் தினந்தோறும் சர்க்கரை வள்ளி கிழங்கை உட்கொள்ளும் வழக்கம் அங்குள்ள முதியோக்கு உண்டு என்பதைக் கண்டறிந்தனர். இது இந்த முதியோர் நூறு ஆண்டுகளாக வாழ்கின்ற ரகசியங்களில் ஒன்றாகும் என்று ஊழியர்கள் கருதுகின்றனர்.

1  2