• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-28 15:25:30    
பெய்சிங்கில் பழைய சியுஸுவெய் சந்தை

cri

சீனாவின் தலைநகரான பெய்சிங், சுற்றுலாவுக்குத் தகுந்த நகரமாகும். உலகப் பண்பாட்டு மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பெரும் சுவர், அரண்மனை அருங்காட்சியகம், கோடைகால மாளிகை ஆகியவை இந்நகரில் உள்ளன. இவற்றைக் காண்பதன் மூலம் சீன வரலாற்றையும் பண்பாட்டையும் பயணிகள் நேரடியாக உணரலாம். பெய்சிங் கௌயா என்னும் வாத்து இறைச்சிக் கறியைச் சாப்பிடும் போது சீன உணவுப் பண்பாட்டை அறிந்துகொள்ளலாம். பயணிகள் பெய்சிங்கில் தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலா நினைவுப் பொருட்களையும் பட்டுத் துணியையும் வாங்க விரும்பினால், செல்ல வேண்டிய இடம் சியுஸுவெய் வீதி என்பதாகும். இவ்வீதி, பெய்சிங்கிலுள்ள அரண்மனை அருங்காட்சியகம், வாத்து இறைச்சிக் கறி ஆகியவை போல புகழ்பெற்றது. அண்மையில் மொத்தம் நீளம் 500 மீட்டருடைய இவ்வீதியில் சிறுசிறு கடைகளில் பொருள் விற்பனை செய்வது முடிவுக்கு வந்தது. இவ்வீதிக்குப் பதிலாகப் பெரிய கட்டடத்தில் பொருள் விற்பனை துவங்கியுள்ளது.

புதிய சியுஸுவெய் வீதி பற்றி குறிப்பிடும் போது, பழைய சியுஸுவெய் வீதி பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது. பெய்சிங் மாநகரின் கிழக்கு பகுதியிலுள்ள வெளி நாட்டுத் தூதரகப் பகுதிக்கு அருகில் பழைய சியுஸுவெய் வீதி அமைந்துள்ளது. இவ்வீதியின் வடக்கில் சீனாவுக்கான அமெரிக்கத் தூதரகம் அமைந்துள்ளது. இவ்வீதியில் விற்கப்படும் பொருட்களில் பட்டுத்துணி ஆடைகள் முக்கியமானவை. கடந்த நூற்றாண்டின் 80ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், பழைய சியுஸுவெய் வீதி, ஒரு சிறிய தெருவாக மட்டுமே இருந்தது. அப்போது, சீன வணிகர் பலர், இவ்விடத்தில் விலை மலிவான, தரமான துணிவகைகளை விற்பனை செய்தனர். முன்னாள் சோவியத் யூனியனின் தூதாண்மை அதிகாரிகளும் பல்வேறு நாடுகளின் பயணிகளும் இவ்வீதிக்கு வருகை தந்து பொருட்களை வாங்கினர். பின்னர், இவ்வீதியில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றதால் இறுதியில், சுற்றுலா பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த வெளிநாட்டு வர்த்தக ஆடைகள், பட்டுத் துணி, சுற்றுலா நினைவுப் பொருட்கள் ஆகியவை முக்கியமாக விற்கப்படும் அரசு சாரா வர்த்தக வீதியாக இவ்வீதி மாறியது.

இவ்வீதியின் வெளித் தோற்றத்திலிருந்து பார்க்கும் போது, பழைய சியுஸுவெய் வீதி ஒரு சாதாரண தெருவாகத் தான் தோன்றும். இங்கு விப்ட இல்லை. மத்திய ஏர்கண்டிஷனரும் இல்லை. பெரிய கடைகளைப் போல வசதிகளும் இல்லை. குறுகிய வீதியும் மக்கள் நெரிசலும் மட்டுமே உள்ளன. குளிர் காலத்தில் கடும் குளிர். கோடைக்காலத்தில் மிகவும் வெப்பம். இருப்பினும், இந்த வீதிச் சந்தைக்கு நாள்தோறும் இருபது, முப்பாதாயிரம் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களில் 70 விழுக்காட்டினர் வெளிநாட்டவர். 40 வயதான வான்கொசி சியுஸுவெய் வீதியின் துவக்கத்திலேயே கடை போட்டுள்ள வணிகராவார். வணிகர் அந்நிய மொழியில் வெளிநாட்டுப் பயணிகளுடன் பேரம்பேசுவதை பழைய சியுஸுவெய் வீதியில் இயல்பாகக் காணலாம். அவர் கூறியதாவது--

"எங்களுடைய வணிகரில் பலருக்கு ஆங்கில மொழி நன்கு தெரியும். ஜப்பான், ரஷியா ஆகிய நாடுகளின் மொழிகளும் அவர்களுக்குத் தெரியும். ஆடைகளின் வகையும் நிறமும் அதிகம் என்று வெளிநாட்டவருக்குத் தெரிவிக்க அப்போது நான் சொன்ன முதலாவது அயல் மொழி, அதிக நேரம் யோசித்த பின்னர் தான் வாயிலிருந்து வெளி வந்தது. அதாவது, இன்றைய கடை உரிமையாளர் போல சரளமாக அந்நிய மொழியில் வெளிநாட்டவருடன் உரையாட முடியவில்லை" என்றார் அவர்.

1  2