• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-28 15:25:30    
பெய்சிங்கில் பழைய சியுஸுவெய் சந்தை

cri

பெய்சிங்கிலுள்ள நடிகரோ, பணக்காரரோ, வெளிநாட்டு நண்பரோ, ஓய்வு நேரத்தில் சியுஸுவெய் சந்தைக்குச் செல்ல விரும்புகின்றனர். சியஸுவெய் வீதியில், அவர்கள், சாதாரண பயணிகள் போல, இந்தக் குறுகிய வீதியில் போய்வந்து, பொருட்களைத் தேர்ந்தெடுத்து, வணிகருடன் பேரம்பேசுவர். இவ்வீதிக்கு அடிக்கடி வருகை தரும் வாடிக்கைக்காரர்களுக்கு விருப்பும் வெறுப்பும் கலந்த உணர்வு உண்டு. இவ்விடத்தில் தரமான பொருட்கள் உண்டு என்பதால் இங்கு வர விரும்புகின்றனர். ஒவ்வொரு தடவையும் வணிகருடன் பேரம் பேச வேண்டும் என்பதன் காரணமாகத் தொந்தரவு ஏற்பட்டு மனதில் வெறுப்புணர்வு ஏற்படுகின்றது. தாம் பழைய சியுஸுவெய் வீதியின் வாடிக்கைக்காரர் என்று தம்மைக் கூறிக்கொள்ளும் டென்மார்க் இளைஞர் ஜொன் கலாகஸ், சீனாவில் ஆங்கில மொழி சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர். கடந்த இரண்டு ஆண்டுகளில் இவ்வீதியில் விலை மலிவான ஆனால் தரமுடைய பொருட்கள் பலவற்றைத் தாம் வாங்கியிருப்பதாக அவர் கூறினார்.

அவர் கூறியதாவது--

"நான் பல தடவை சியுஸுவெய் வீதிக்குப் போய்வந்துவிட்டேன். புதிய சியுஸுவெய் வீதியுடன் ஒப்பிடும் போது, பழைய சியுஸுவெய் வீதியை மேலும் விரும்புகின்றேன். பழைய சியுஸுவெய் வீதி, மனிதர்களைக் கவர்ந்து இழுத்தது. பழைய சியுஸுவெய் வீதிச் சந்தையின் சூழ்நிலை அவ்வளவு நல்லதல்ல என்ற போதிலும், அங்குள்ள மக்களிடையே அன்பு உணர்வை உணரலாம்" என்றார் அவர்.

தற்போது, வசதியற்ற பழைய சியுஸுவெய் வீதியிலான பொருள் விற்பனை சூழ்நிலை மலையேறிவிட்டது. அவ்வீதியில் இருந்த வணிகர்கள் பலர், புதிய விற்பனைக் கட்டடத்தில் இடம் பெயர்ந்துள்ளனர். இக்கட்டடம் பெரியது. சுத்தமானது. புதிய சியுஸுவெய் சந்தை என்று இது அழைக்கப்படுகின்றது.

புதிய சியுஸுவெய் கட்டடம், பழைய சியுஸுவெய் வீதிக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. 7 மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்தில் தரைக்கு மேல் 5 மாடிகளும் தரைக்குக் கீழ் 2 மாடிகளும் உள்ளன.

புதிய சியுஸுவெய் சந்தை பற்றி அடுத்த சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் கூறுவோம்.


1  2