• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-08 15:42:04    
ஆசைப்படு! பெரிதாக ஆசைப்படு

cri
இந்த 2005ம் ஆண்டு ஐன்ஸ்டீன் ஆண்டு என்று அழைக்கப்படுகின்றது. பௌதிகம் எனப்படும் "இயற்பியல் உலகின் தந்தை"எனப் போற்றப்படும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவாக இந்த ஆண்டை சர்வதேச இயற்பியல் ஆண்டாக ஐ.நா அறிவித்துள்ளது. சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் புவி பற்றி காலங்காலமாக நிலவிவந்த கருத்துக்களை மாற்றும் வகையில் இயற்பியலின் அடிப்படையையே உலுக்கக் கூடிய புரட்சிகரமான விஞ்ஞானக் கருத்துக்களை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வெளியிட்டார். ஏப்ரல் 18 அவர் மறைந்ததன் 50வது ஆண்டு நிறைவு என்பதாலும் அவர் நினைவைப் போற்றும் வகையில் ஐன்ஸ்டீன் ஆண்டு என்று இந்த ஆண்டு அழைக்கப்படுகின்றது.

அவருடைய அலைபாயும் அடர்த்தியான நரைத்த தலைமுடியும் தொங்கு மீசையும் இன்றைக்கும் அறிவாளிக்கே உரிய ஒரு இலக்கணமாகக் கருதப்படுகின்றது. ஐன்ஸ்டீனுக்குச் சமமான ஒரு விஞ்ஞானி யார் என்று பார்த்தால் 2400 ஆண்டு கால வரலாற்றில் நியூட்டன், கலிலியோ, அலிஸ்டாட்டில் ஆகியோரைத் தான் செல்ல வேண்டும். நூறாண்டுகளுக்கு முன்பு 1905ம் ஆண்டில் இடம் காலம் ஒளி பருப்பொருன் ஆகியவை பற்றிய உலகின் பாரம்பரியக் கருத்துக்களை தலைகீழாக மாற்றியமைத்த 5 அறிவியல் ஆவணங்களை அவர் முன்வைத்தார். குதிரை வண்டிகள் ஓடிய காலத்தில் உதித்த அவருடைய ஐம்பெரும் சிந்தனைகளின் விளைவாக ஈராயிரம் ஆண்டுகளாக ஏற்படாத ஒரு தொழில் நுட்பப் புரட்சி ஒரு நூற்றாண்டு காலத்திலேயே ஏற்பட்டு விட்டது.

இன்றைக்கு நம்மிடையே தண்ணீராக் புழங்குகின்ற கம்ப்யூட்டர்கள் செயற்கைக் கோள்கள் லேசர் ஒளிக்கற்றை, தொலைக் காட்சி, அணுமின்சாரம், அனைத்திற்கும் மேலாக ஒரு அச்சுறுத்தல் ஆயுதமாகத் திகழும் அணு குண்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்படுவதற்கு ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடுகளே அடிப்படையாக அமைந்தன என்று சொல்லலாம். இந்த பிரபஞ்சத்தை புவியை இயக்கக் கூடிய ஒரு தனிப்பெரும் சக்தி எது என்பதைக் தேடும் ஒரு வேட்கையை அவர் தொடங்கி வைத்தார். இந்த சக்தியை ஒரே சீரான ஒற்றை விதியை கண்டி பிடித்து விட்டார் "கடவுளின் மனதையே கூட நம்மால் புரிந்து கொள்ள முடியும்"என்று ஐன்ஸ்டீன் கூறினார்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இருந்த மனிதனின் நிலை இப்போது இல்லை. இந்த முற்றிலும் வேறுபட்ட ஒரு நிலை ஏற்பட்டதற்கு ஐன்ஸ்டீனே காரணம் என்று கூறுகிறார். அமெரிக்க இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தைச் சேர்ந்த வானியற்பியல் அறிஞர் மைக்கேல் ஷாரா.

இன்றைய நமது பண்பாட்டின் தாத்தா என்று வெல்லமாக அழைக்கப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஹிட்லரின் ஜெர்மனியில் இருந்து தப்பித்து மனித குலத்தின் அமைதிக்காக பாடுபட்டார். மக்களிடையே தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி மனிதாமிமானத்திற்காகவும் உலகில் அமைதி நிலவிடவும் குரல் கொடுத்தார். ஆராய்ச்சிக் கூடத்தின் இருளில் ஒளிந்து கொள்ளாமல் வெளிச்சத்திற்கு வந்து பாசிசக் கொடுமைகளுக்கும் இன ஒதுக்கல் அநீதிக்கும் எதிராகப் போர்க் குரல் எழுப்பிய விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1955ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 18ம் நாள் தமது 76வது வயதில் மறைந்தபோது அமெரிக்க உறவுத் துறையில் அவருக்கு எதிராக 1400 பக்கங்களைக் கொண்ட ரகசியக் கோப்பு பராமரிக்கப்பட்டிருந்தது. தமது வாழ்வில் இருமுறை திருமணம் செய்தார். இயற்பியல் மீது கொண்ட காதலால் இல்லற வாழ்க்கையையும் தமது குழந்தைகளையும் புலிக்கணித்தார். அவர் காரோட்டக் கற்றுக் கொண்டதே இல்லை அடிக்கடி பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில் இருந்த தமது அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு சாக்ஸ் கூட அணியாமல் அவர் நடந்தே சென்றதை பலர் பார்த்துள்ளனர். அத்தகைய தனிமைத் தருணங்களில் அறிவு வேட்கைப்புடன் தமது உள்ளுக்குள்ளே மோனத்தவம் இயற்றினார் என்றே சொல்லலாம். "அறிவைக் காட்டிலும் கற்பனையே மிக முக்கியமானது"என்று கூறிய ஐன்ஸ்டீன், "கேள்வி கேட்பதை எரு போதும் நிறுத்தக் கூடாது"என்றார். நமது இந்திய ஜனாதிபதியான அறிவியல் அறிஞர் டாக்டர் அப்துல் கலாமும் இதைத் தானே "ஆசைப்படு, பெரிதாக ஆசைப்படு"என்று கூறுகிறார்.

1  2