ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறுவனாக இருந்த போது தாம் கண்ட ஒரு பகல் கனவு பற்றி நினைவு கூர்ந்தார். அதாவது ஒளிக் கற்றையின் வேகம் பற்றியது அந்தக் கனவு. அந்தக் காலத்தில் இயற்பியல் அறிஞர்கள் வகுத்து வைத்த கோட்பாடுகளின் படி ஒளியைப் போல விரைவாகப் பயணம் செய்யும் போது புறவெளியில் ஒளிக் கற்றை நிலையாக இருக்கும். ஆனால் ஐன்ஸ்டீன் கூறியது என்ன வென்றால் ஒளியின் வேகம் விநாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டராக நிரந்தரமாக இருக்கும். அது நாம் செல்லும் வேகத்தைப் பொறுத்தும். நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் பொறுத்தும் வெவ்வேறு வகைகளில் காட்சி தருகின்றது.
உதாரணமாக பூமியை வலம் வரும் செயற்கைக் கோள்களில் உள்ளு கடிகாரம் சிறிது மெதுவாகவே ஓடுகின்றது. ஏனென்றால் செயற்கைக் கோள்கள் மணிக்கு 17,000 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன. பூமியிலுள்ள கடிகாரங்களுக்கு இசைந்ததாக செயல்பட செயற்கைக் கோள் கடிகாரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐன்ஸ்டீன் முன்வைத்த மிக முக்கியமான கோட்பாடு பொது ரிலேட்டிவிட்டி தியரி எனப்படுகின்றது. இது BIG BANG பிரஞ்சம் விரிவடைதல் கருந்துளைகள் போன்ற பெரிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தன. ஐன்ல்டீனின் ரிலேட்டிவிட்டி கோட்பாட்டின் நுட்பங்கள் பல அறிவியல் அறிஞர்களுக்குப் புரிய வில்லை. குழப்பத்தில் ஆழ்ந்தனர். அப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மிக எனிமையான ஒரு விளக்கம் தந்தரார். "சூடாக இருக்கும் ஒரு அடுப்பின் மீது உங்கள் கையை ஒரு நிமிட நேரம் வையுங்களை. அது ஒரு மணி நேரம் போலத் தெரியும். அழகான ஒரு பெண்ணுடன் ஒரு மணி நேரம் உட்கார்ந்திருங்கள். நேரம் போவதே தெரியாது. ஒரு மணி என்பது ஒரு நிமிடமாகப் பறந்து விடும். அது தான் ரிலேட்டிவிட்டி கோட்பாடு"
நூற்றாண்டு கொண்டாட்டம் என்னும் போது தான் ஐன்ஸ்டீன் பற்றிப் பேசுகிறோம். இன்றைய உலகில் நடிகர் நடிகைகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மூலைமுடுக்கெல்லமாம் மன்றங்கள் இருக்கும் போது ஐன்ஸ்டீன் போன்ற உண்மையான சிந்தனையாளர்கள் பற்றி படித்த விவரம் தெரிந்த விஞ்ஞானிகள் கூட அவ்வளவாகப் பேசுவதில்லை. பொருளாதாரத்தில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இருப்பதைப் போலவே அறிவியலிலும் அறிந்தவர்கள் அறயாதங்கள் என்ற இடைவெளி பெருகிவிட்டது. நமது சமூகத்தில் ஏற்பட்டுவிட்ட தொழிற் புரட்சியினால் எண்ணற்ற விஞ்ஞானிகள் உருவாகிவிட்டனர். ஆனால் அவர்கள் பாமர மக்களுக்கு எட்டாத உயரத்தில் உள்ளனர். இந்த இடைவெளியை நிரப்புவது படித்த மனிதர்கள் செய்ய வேண்டிய முதல் வேலையாகும். அதற்கு நாம் ஆசைப்படுவோம். 1 2
|