• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-10 17:37:25    
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

cri

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாளேட்டில் ஒரு செய்தி படித்தேன். இரவு வேலை பார்த்துவிட்டு வந்து பகலில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஆலைத் தொழிலாளி தனது குழந்தையின் அழுகையால் தூக்கம் கெட்டு எரிச்சல் அடைந்து அந்தக் குழந்தையைத் தரையில் மோதிக் கொன்று விட்டாராம். அதிர்ச்சி யூட்டும் செய்திதான். ஆனால் இந்தச செய்தியின் பின்னணியில் உள்ள உண்மை ஆராய்ச்சிக் குரியது.

உலகில் உள்ள மக்கள் 27 விழுக்காட்டினருக்கு உறக்கக் கோளாறுகள் இருப்பதாக உகல சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவிக்கின்றது. இதனால் அக்கறை கொண்ட சர்வதேச மனநலன் மற்றும் நரம்பியல் ஆய்வுக் கழகம் மார்ச் 21ம் நாளை உலக உறக்க நாளாக அறிவித்து தூக்கம் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மனிதர்கள் தூங்க முடியாத ஒரு நிலை ஏன் ஏற்படுகின்றது?மனச் சோர்வு, கூச்சல் மற்றும் இரைச்சல், பக்கத்தில் படுத்திருப்பவர் விடும் குனட்டை ஒலி இவை காரணமாக நடு இரவில் நமது தூக்கம் கலைந்து திடுக்கிட்டு கண்விழித்து பேந்தப் பேந்த முழிக்கிறோம். சீனாவிலே சீன உறக்க ஆராய்ச்சிச் சங்கம் அண்மையில் ஒரு ஆய்வு நடத்தியது. நகர வாசிகளில் 40 விழுக்காட்டினருக்கு இந்த உறக்கக் கோளாறு இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. மேலும் பலருக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் நினைத்தவுடன் தூங்கிவிடக் கூடிய ஒரு மிகையான போக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.
1  2