• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-10 17:37:25    
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

cri

 

நகரமங்களின் தூக்கம் கெடுவதற்கு என்ன காரணம்?அதிகமான வேலைப்பளுவும் வேகவேகமான தாலுமாறான நகர வாழ்க்கை முறைகளும் மனிதர்களின் தூக்கத்துக்கு பயமனாக அமைகின்றது என்று பெய்ச்சிங் ச்சுவான்வு மருத்துவமனையைச் சேர்ந்த பேராசிரியர் வாங் யுப்பிங் கூறுகின்றார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் தீவிரமான வேகம், பலருடைய வாழ்க்கையை விரைவுப்பாதையில் முடுக்கி விட்டுள்ளது என்கிறார் அவர். இதனால் பலர் அலுவலகத்தில் வேலைபார்க்கும் போதே மேசையில் கைகளை மடித்துவைத்து அதன் மேல் தலைவைத்து ஆனந்த சயனம் அனுபவிப்பதைக் காணலாம். பெலியவர்களுக்குத் தான் இந்த நிலை என்ற வில்லை. கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கடைசி பெட்ச்சில் வட்காரவிரும்பும் மாணவர்கள் சிலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீண்ட பள்ளி நேரம் வீட்டுப்பாடச் சுனம், பள்ளி முடிந்ததும் பல்வேறு வேலைகள் இவை யாவும் சேர்ந்து மாணவர்களின் தூக்கதிரைக் கெடுக்கின்றன. அண்மையில் சீன இளைநர் மற்றும் குழந்தைகள் ஆராய்ச்சி மையம் பெய்சிங் ஷாங்கை உள்ளிட்ட 10 பெரிய நகரங்களில் ஒரு ஆய்வை நடத்தியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 5846 மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு விடைகள் பெறப்பட்டன. 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட மாணவர்களில் 10.4 விழுக்காட்டினருக்கு ஒரு நாளில் 8 மணி நேரத் தூக்கம் கூடக் கிடைப்பது இல்லை என்று ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன. கண் விழித்திருப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கம் என்கிரார் பெய்சிங் நகர குழந்தை நோய் மருத்துவர் பெங் மின் குறிப்பாக குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் தேவை என்கிறார் அவர்.

குழந்தைகள் என்றதும் ஒன்று நிறைவுக்கு வருகின்றது. விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் கண்களில் தூக்கக் கலக்கம் கலையாத கண்களை கசக்கிய படி பள்ளிப் பேருந்துக்காக சாலையில் அன்னையர் அல்லது தந்தையரின் கையைப் பற்றியபடி காத்திருக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பார்த்திருக்கின்றோம். பெய்சிங் நகரில் காலை நடை பயில நான் செல்லும் போது தாய் சைக்கில் ஓட்ட பின்னால் உட்கார்ந்து தூங்கித் தூங்கி விழுந்தபடியை பள்ளிக்குச் செல்லும் சின்னஞ்சிறு கண்மலர்களைக் கண்டிருக்கிறேன். அந்தக் காட்சியைக் கண்ட போது "தூக்கம உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்"என்ற கவிஞர் கண்ணதாசனின் பாயல் வரிகள் தான் நினைவுக்கு வந்தன.

அதேவேளையில் "உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான் என்ற பட்டுக் கோட்டையாலின் பாட்டும் நினைவுக்கு வந்தது-தூங்காதே தம்பி தூஹ்காதே" என்று என் மனதூக்குள் பாடிக் கொண்டேன்.


1  2