• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-12 16:59:15    
பெய்சிங்கில் புதிய சியுஸுவெய் சந்தை

cri

புதிய சியுஸுவெய் சந்தை அதாவது புதிய சியுஸுவெய் கட்டடம், பழைய சியுஸுவெய் வீதிக்குப் பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. 7 மாடிகளைக் கொண்ட இக்கட்டடத்தில் தரைக்கு மேல் 5 மாடிகளும் தரைக்குக் கீழ் 2 மாடிகளும் உள்ளன. அங்கு பல்வகை வணிகப் பொருட்கள் விற்பனையாகின்றன. தொப்பி, பொய் கூந்தல், பை, காலுறை, தோல் செருப்பு, பருத்தி உடைகள், தோல் ஆடை, பட்டுத் துணிச் சட்டை உள்ளிட்ட பல பொருட்கள் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. சீனாவின் சிங் வமிசக் காலத்திலான நீளமான மேலங்கி, கை வைத்து தைக்கப்பட்ட சட்டை, சீனாவின் யுன்னான் மாநிலத்தின் சிறுப்பான்மை தேசிய இனத்தின் பூத் தையல் பின்னல் துணிகள் முதலியவையும் அங்கு விற்பனையாகின்றன.

தவிர, புதிய சியுஸுவெய் கட்டடத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வசதி, பொருள் வாங்குவதற்கு வழிகாட்டுவது உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன. சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சில சிற்றுண்டி கடைகளும் இப்புதிய சியுஸுவெய் கட்டடத்தில் வியாபரம் செய்கின்றன. இதுவரை, இக்கட்டடத்தின் உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரப் பணி நிறைவடைந்தது. இக்கட்டடத்தில் வியாபாரம் செய்ய விரும்பும் வணிகர்கள் பதிவு செய்யும் பணியும் முடிவடைந்தது. மார்ச் திங்கள் 19ந் நாள் அது அதிகாரப்பூர்வமாக வாடிக்கைக்காரருக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. புதிய சியுஸுவெய் சந்தை மீது தாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக இவ்வாண்டு 35 வயது லியுலிச்சுன் அம்மையார் கூறினார். அவர் கூறியதாவது--

"புதிய சியஸுவெய் சந்தை ஒழுங்கானது. சுற்றுச்சூழ்நிலை பரவாயில்லை. வானிலையினால் அது பாதிக்கப்படவில்லை. பழைய சியுஸுவெய் வீதியில், வானிலை மோசமானால் வரும் வாடிக்கைக்காரர்கள் குறைந்து விடுவர். குறிப்பாக மழை பெய்யும் போது, மேலும் குறையும். வணிகராகிய நாங்கள் முன்பு வானிலையை சார்ந்திருந்து வேலை செய்தோம். வானிலை மோசமானால் அன்று பொருட்கள் குறைவாகத் தான் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், தற்போது, நிலைமை மாறிவிட்டது" என்றார் அவர்.

1  2