• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-12 16:59:15    
பெய்சிங்கில் புதிய சியுஸுவெய் சந்தை

cri

வாடிக்கைக்காரரின் தேவை போதிய அளவில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதால், புதிய சியுஸுவெய் கட்டடத்தில் பயணிகள் பல்வகையான வசதிகளைப் பொருள் வாங்க வரும் சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கலாம். புதிய சியுஸுவெய் சந்தையில் இடம்பெறும் கடைகளின் எண்ணிக்கை 1500ஐத் தாண்டியுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கென மேலும் அதிகமான வசதிகள் செய்து தரப்படும் என்று புதிய சியுஸுவெய் கட்டடத்தின் தலைமை மேலாளர் சிவெய் தெரிவித்தார். அவர் கூறியதாவது--

"வெளிநாட்டுப் பயணிகளுக்கு, சீனப் பெரும் சுவரில் ஏறுவது, வாத்து இறைச்சிக் கறி உண்ணுவது, சியுஸுவெய் வீதியில் சுற்றுலா மேற்கொள்வது ஆகிய சேவை வழங்குவதற்காக, பெய்சிங்கிலுள்ள 20க்கும் அதிகமான சுற்றுலா நிறுவனங்களுடன் உடன்படிக்கை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். பயணக் குழு ஏற்பாடு செய்த சுற்றுலா நிகழ்ச்சி நிறைவடைந்த பின் பயணிகள் சியுஸுவெய் சந்தைக்கு வருகை தந்து பொருட்களை வாங்குவதற்குத் துணை புரியும் பொருட்டு, புதிய சியுஸுவெய் சந்தையின் பணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது கோடை காலத்தில் இரவு பத்து மணி வரைக்கும் குளிர்காலத்தில் இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.

பெய்சிங் சியுஸுவெய் சந்தைக்குச் சென்று பொருள் வாங்குவது என்பது, பயணிகளின் சுற்றுலாத் திட்டத்தில் முக்கிய இடம்பெற்றுள்ளது என்று கூறலாம். ஏனெனில், சியுஸுவெய் சந்தையில் வேறுபட்ட விலையுடைய பல்வகை சீனப் பட்டுத் துணைகளை வாங்கலாம். அத்துடன் சியுஸுவெய் வீதி, பெய்சிங் மாநகரின் பிரபல வீதியான சான்ஆன் வீதியில் அமைந்துள்ளது, போக்குவரத்து வசதியானது. சுரங்க ரயில் மூலம் அவ்விடத்தை நேரடியாகச் சென்றடையலாம். ஆனால், இச்சந்தையில் பொருள் வாங்கும் போது, வணிகருடன் பேரம்பேசும் திறமை இன்றியமையாதது. பொதுவாக, வணிகர் கூறிய பொருள் விலையில் 40 விழுக்காடு குறைக்கப்படலாம். பேரம்பேசும் போது, வாடிக்கைக்காரரோ பயணிகளோ பொருள் விலையை அதிக அளவில் குறைக்க வேண்டும்.

கடந்த முறையில் பழைய சியுஸுவெய் சந்தை பற்றி அறிமுகப்படுத்தினோம். நீங்கள் கேட்டீர்கள் அல்லவா?இவ்விரு சியுஸுவெய் சந்தைகளுக்குமிடையில் வேறுபாடு உண்டா?முக்கிய வேறுபாடு எது?இனி வாய்ப்பு கிடைக்கும் போது பெய்சிங்கிற்கு வருகை தந்து, புதிய சியுஸுவெய் சந்தையைப் பார்வையிடவும் பொருளை வாங்கவும் விரும்புகிறீர்களா?உங்களுடைய கருத்து என்ன?இது எல்லாம் கடிதம் மூலம் எங்களுக்குத் தெரிவிக்கலாம்.


1  2