• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-19 19:44:36    
ச்சியுஹுவா மலை

cri
சீனாவில் 4 புகழ்பெற்ற புத்த மத மலைகள் உள்ளன. அவை, சாங்சி மாநிலத்தின் வுதை மலை, ஸ்ச்சுவான் மாநிலத்தின் எமெய் மலை, செக்கியாங் மாநிலத்தின் பூதூ மலை, அன்ஹுவெய் மாநிலத்தின் ச்சியுஹுவா மலை என்பனவாகும்.

ச்சியுஹுவா மலை, மத்திய சீனாவின் அன்ஹுவெய் மாநிலத்தின் மேற்கு பகுதியிலுள்ள சிங்யாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் நிலபரப்பளவு 120 சதுர கிலோமீட்டராகும். ச்சியுஹுவா மலை அவ்வளவு உயரமாக இல்லை. கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் நீட்டர் உயரத்தில் 30க்கும் அதிகமான மலைகள் உள்ளந. எனினும், இவற்றில் மிக உயரமான மலையான ஷிவான் சிகரத்தின் உயரம் 1342 மீட்டர் மட்டுமே.மலையின் உயரம் முக்கியம் என்பதல்ல. தெய்வம் இருந்தால் அது புகழ் பெறும். ச்சியுஹுவா மலையில் 2 பேர் இருப்பதன் காரணமாக சீனாவில் புகழ்பெற்றது. இவர்களில் ஒருவர், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முந்திய தாங் வமிச காலத்தில் மா கவிஞர் லீபெய் என்பவர். மற்றவர், தாங் வமிச காலத்தில் சீனா வந்தடைந்த தென் கொரிய இளவரசர் கிம் கியோ கா என்பவர் ஆவார். கவியரசர் லீபெய், ச்சியுஹுவா மலையில் சுற்றுலா மேற்கொண்ட போது உணர்ச்சி வசப்பட்டு, ச்சியுசி மலையை ச்சியுஹுவா மலை எனப் பெயர் மாற்றினார்.

இம்மலையில் உள்ள 9 சிகரங்கள், தாமரைப்பூ போல காணப்படுவதாக வர்ணித்த அவர் மலையின் பெயரை ச்சியுஹுவா மலை என மாற்றினார். தென் கொரிய இளவரசர் கிம் கியோ கா இம்மலை சென்றடைந்த போது, வயது 24. அவர் முதுமை காலம் வரை தியானம் செய்துவந்தார். மரணமடைந்த பின் அவருடைய பூதவுடல் 3 ஆண்டு வரை அழிந்துபோகவில்லையாம். பௌத்த திருமறையில் கஷிதிகர்பாவின் மறு பிறப்பு என மக்கள் கருதியதால் ச்சியுஹுவா மலையானது, கஷிதிகர்பாவின் இடமாக அதாவது புத்த துறவிகள் அல்லது தாவோ மத குருமார்கள், மத நடவடிக்கையில் ஈடுபடும் இடமாகும். கவியரசர் லீபெய், இளவரசன் கிம் கியோ கா ஆகிய இருவரின் காரணமாக, ச்சியுஹுவா மலை, தாமரை புத்த மத இடம் என பின்னர் அழைக்கப்பட்டுவருகின்றது. இவ்விடமானது, புத்த மதத்தவர், புனித யாத்திரை மேற்கொள்ளும் பிரபல மலையாகவும் பயணிகள் மலைச் சிகரங்களைப் பார்வையிடும் சிறந்த இடமாகவும் திகழ்கின்றது.

ச்சியுஹுவா மலைக்குச் செல்லும் வழியில் மலைத் தொடர்கள் எங்கெங்கும் காணப்படலாம். அருகில் பசுமையான கொடி செடிகளும் மரங்களும் வளர்கின்றன. தொலைவில் சமையல் புகை தென்படுகின்றது. மலைகளிடையில் காணப்படும் மஞ்சள் நிறச் சுவராலும் கறுப்பு நிற ஓடுகளாலும் ஆன வீடுகள் கோயில்களாகும்.

1  2