வரலாற்றுப் பதிவேட்டின் படி, ச்சியுஹுவா மலையில் மொத்தம் 14 மதத் துறவிகளின் அழிந்துபோகாத பூதவுடல்கள், கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் சில காரணங்களினால், சில வூதவுடல்கள் நாசப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, அங்கு 5 பூதவுடல்களைக் காணலாம். இளவரசன் கிம் கியோ காவின் பூதவுடல், 1200 ஆண்டுகளுக்கு முன் வெள்ளை சலவைக் கல்லான கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கம்பி வட வாகனம் மூலம் மலை ஏறிய போது, உயரமான செங்குத்தான மலைகளும் கடல் போன்ற மேகங்குளும் காணப்படுகின்றன. மேலே இருந்து கீழே பார்க்கும் போது, ச்சியுஹுவா பட்டினத்தில் கறுப்பு நிற ஓடுகளால் வேயப்பட்ட வெண்ணிற சுவருடைய குடியிருப்பு வீடுகள் வெகு தொலைவில் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பண்டைகால வழிபாட்டு மேடையைச் சென்றடையும் போது, மனித உலகம் மிக தொலைவில் உள்ளது போல் தோன்றுகிறது.
பண்டைக் கால வழிபாட்டு மேடையானது, கிம் கியோ கா, அக்காலத்தில் ச்சியுஹுவா மலையில் புத்த திருமறை ஓதும் போது, ஒரு முறை நெற்றி நிலத்தில் படும்படி வணங்கினார். அவர் பக்தி மிக்கவர். திருமறை ஓதும் இடத்தில் மிகப் பெரிய இரட்டை அடிச்சுவடுகளை அவர் விட்டுச்சென்றார். யாத்திரிகளும் பயணிகளும் அங்கு சென்றடைந்த போதெல்லாம், அவர்களில் பலர் தமது காலணிகளைக் கழற்றி வெறும் கால்களால் கிம் கியோ காவின் அடிச்சுவடுதகளை மிதித்து நடக்க விரும்புகின்றனர். மங்களத்தை வீட்டுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பது ்வர்களுடைய விருப்பமாகும். இது பற்றி வழிகாட்டி சாங் யெஹொங் குறிப்பிடுகையில், ஒருவர் உயிருடன் இருக்கும் போது, தீய செயலில் ஈடுபட்டால், அவர் மரணமடைந்த பின், நரகத்தில் துன்புறுத்தப்படுவார். இத்தீயவர்களின் ஆத்மாவைத் துயரத்திலிருந்து கஷிதிகர்பா விடுவிப்பார். உலகில் துன்பத்துக்குள்ளாகிய அனைவரின் ஆத்மாவைத் துயரத்திலிருந்து விடுவித்த பின்னர் தான், தாம் புத்தராக மாற வேண்டும் என்பது அவருடைய விருப்பம் என்று புத்த திருமறை கூறுகின்றது.

ச்சியுஹுவா மலையின் கீழ்ப்பகுதியில், phoenix தேவதாரு நிலையம் யுள்ளது. இந்த பண்டை கால தேவதாரு, phoenix தேவதாரு என்று பெயர் பெற்றது. இது, phoenix மலையில் சுற்றுலா பரவளுக்கான அடையாளமாகத் திகழ்கின்றது. 1 2
|