• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-09 14:15:15    
மகௌவில் சிற்றுண்டி

cri

மகௌ கறியானது, சமையற்காரர்களால் தொன்மை வாய்ந்த போர்த்துகீசிய மற்றும் சீன முறையில், பழவகை, இறைச்சி வகை, மீன், இறால் முதலியவற்றைச் சேர்த்து சமைக்கப்பட்டது. பல உணவகங்கள் சிறந்த சீன உணவுகளைத் தயாரிக்கின்றன. வேறுபட்ட தனிச்சிறப்பு வாய்ந்த சுவையான சீனச் சாப்பாட்டுக் கடைகள் பல்வேறு பயணிகளின் வெவ்வேறான விருப்பங்களை நிறைவு செய்யலாம்.

பயணிகளைப் பொறுத்தவரை, இந்நகரில் இரவு உணவு தவிர, பல்வேறு சீன உணவு வகைகளையும் சிற்றுண்டிகளையும் தேர்தெடுக்கலாம். இந்த உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகளில் பெரும்பாலானவை, கையால் தயாரிக்கப்பட்டவை. பயணிகளில் பலர் இவற்றை வாங்கி அன்பளிப்புப் பொருட்களாகத் தமது உற்றார் உறவினரிடமும் நண்பர்களிடமும் வழங்க விரும்புகின்றனர். ஒரு உணவகத்தின் தலைவி வூசியௌநி கூறுகிறார்,

எங்கள் கடையில் தயாரிக்கப்பட்ட நிலக் கடலை மிட்டாய், முட்டைச் சுருள் முதலியவை மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நாள்தோறும் வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

அவர்களில் மகௌ நகரவாசிகள் தவிர, அதிகமானோர் பயணிகள். எங்களுடைய சிற்றுண்டி மற்றும் உணவுப் பொருட்களை மிகவும் விரும்புகின்றனர் என்றார் அவர்.

உணவு வகை தவிர, பொருள் வாங்கும் சுவர்க்கம் எனஅற பெயரும் மகௌவுக்குரியது. இந்நகரில் குறைந்த வரி விதிப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது. மேம்பாடான புவியியல் நிலவரம் ஆகியவற்ரின் காரணமாக, பொருள் விலை மலிவு. இது மட்டுமல்ல. பொருள் வகைகளும் அதிகமானவை. குறிப்பாக, தங்க நகை வகைகள், தொல்பொருட்கள், மின்னணு பொருள், புகழ் பெற்ற கைகடிக்காரம், ஒப்பனைப்பொருள் முதலியவை வாங்கத் தக்கவை.

1  2