• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-09 14:15:15    
மகௌவில் சிற்றுண்டி

cri

மகௌவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் பொருட்டு, 2003ல் சீன பெரு நிலப்பகுதியைச் சேர்நத பல மாநிலங்களும் நகரங்களும் மகௌவில் தனிமுறை பயண திட்டங்களைத் துவங்கின. இதை அடுத்து, மகௌவில் சுற்றுலா மேற்கொள்ளும் சீன பெரு நிலப்பகுதி பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிந்றது. மகௌ புறப்பாடும் வருகையும் பறறிய விவகாரப் பணியகத்தின் அதிகாரி சியுவெய்வன் கூறியதாவது,

மகௌ தாய்நாட்டுக்குத் திரும்பிய பின், மகௌவுக்கு வருகை தரும் பயணிகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவருகின்றனர். தாய்நாட்டுடன் ஒன்றிணைவதற்கு முன் திங்கள் தோறும் மகௌவில் சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் மட்டுமே. ஆனால், 2004ஆண் ஆணஅடு நவம்பர் திங்களில் பயணிகளின் எண்ணிக்கை 30 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அண்மையில், மகௌவில் நடைபெற்ற உணவு விழா, கலை விழா உள்ளிட்ட நடவடிக்கைகளினால், மேலும் அதிகமான பயணிகள் மகௌவில் சுற்றுலா மேற்கொள்கின்றனர் என்றார் அவர்.

இனிமேல, தமது பணியை மேலும் மேம்படுத்தி, மகௌவில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான, தரமான சேவை வழங்கப்போவதாக அவர் தெரிவித்தார்.

இனி சுற்றுலா பற்றிய தகவல்களை வழங்குகிறோம்.

லியு யாங் வாணவெடி

லியு யாங், வாணவெடிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நகரமாகும். இங்கு தயாரிக்கப்படும் வாணவெடிகள் உலகப் புகழ்பெற்றவை. இதனால், இந்நகரிலுள்ள பட்டாசு காட்சியகத்திற்கு, லியு யாங் நகரில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் செல்ல ஆசைப்படுகின்றனர். ஏனெனில், இந்தக் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டாசு வகைகளும், வாணவெடி வகைகளும் லியுயாங் வாணவெடியின் துவக்கம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றி பறை சாற்றுகின்றன. இந்தக் காட்சியகத்தில், கடந்த சுமார் 700 ஆண்டுகளில் வாணவெடி தயாரிப்பில் லியுயாங் மக்கள் பயன்படுத்தும் கருவிகள் காணப்படலாம். இன்று, லியுயாங் வாணவெடி வகைகள் 3000க்கும் அதிகமாகும். உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிரதேசங்களிலும் அவை விற்பனையாகின்றன. சீனாவின் விழா நாட்களில் விடப்படும் ஏறக்குறைய அனைத்து வாணவெடிகளும் லியுயாங்கில் தயாரிக்கப்பட்டவை. பாதுகாப்புப் பிரச்சினையினால், வாணவெடி வாங்குவதற்குச் சிறப்பு அனுமதி பெற வேண்டும். இதன் விளைவாக, பயணிகள் அதைக் கொண்டு செல்ல முடியாது. இருப்பினும், பரவாயில்லை. லியுயாங்கிலுள்ள சிறப்புப் பொருட்களில் வாணவெடி தவிர, இன்னும் பலவற்றை வாங்கலாம். எடுத்துக்காட்டாக, கொத்து மலர்ச் செடிவகை கல் போன்ற பொருட்களை வாங்குவது அனுமதிக்கப்படுகின்றது.

கான்நாவில் சுற்றுலா

கான்சு மாநிலத்தின் தலைநகரான லான்சோ சென்றடைந்த பின்னர், கோச்சு வண்டி மூலம் கான்நா சென்றடையலாம். கான்நாவின் நிலப்பரப்பளவு விசாலமானது. அது நீண்ட வரலாறுடையது. சியௌ குடும்பப் பண்பாடு, ஸ்வா பண்பாடு முதலியவற்றின் மரபுச் சிதிலங்கள் இங்கு காணப்படுகின்றன. உலகில் புகழ்பெற்ற லாப்லின் கோயில், அரசு நிலை இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசமான ச்சா கல் காடு, பறவைகள் புகலிடமான காஹெய் ஏரி, மாபெரும் புல் வெளி, இயற்கை காட்சி எழில் மிக்க லியெஹுவா மலை, லான்மு கோயில் எல்லாவற்றையும் கண்டுகளிக்கலாம். கான்நாவில் சுற்றுலா செல்ல அதிக செலவு ஆகாது. ஆனால் இயற்கைக் காட்சித் தலங்களும் பண்பாட்டு மரபுச்சிதிலங்களும் அதிகமாக இருப்பதால், அதிக நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும். கான்நாவில் நன்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டுமானால், குறைந்தது 2 வாரங்கள் தேவை.

1  2