• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-02 21:50:51    
மகௌ

cri

தென் சீனாவின் சூச்சியாங் ஆற்று முகத்துவாரத்தில் அமைந்துள்ள மகௌ, அழகாக காட்சி தரும் கடற்கரை நகரமாகும். சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய இந்நகரில், கீழை மற்றும் மேலை நாட்டுப் பண்பாடுகள் கலந்து காணப்படுவதால் இது தனிச்சிறப்பு வாய்ந்தது. மகௌவின் வீதிகள் மற்றும் தெருகளில் நடந்துசெல்லும் போதும், கத்தோலிக் தேவாலயம், கோயில், சந்தை மற்றும் உணவகத்தைப் பார்க்கும் போதும் இந்நகரில் வேறுபட்ட பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள், வெவ்வேறான மத நம்பிக்கைகள், பல்வகை உணவுப் பழக்க வழக்கங்கள் ஆகியவை கலந்திருப்பதை ஒன்றிணைந்திருப்பதைப் பயணிகள் காணலாம்.

முன்பு, மகௌ அதாவது சீன மொழியில் ஔமன் ஒரு சிறிய மீன் பிடி கிராமமாக இருந்தது. மீனவர்களின் மனதில் மதிப்புக்குரிய சீனத் தேவி மாசூயினால் அதன் பெயர் பெற்றது. அதற்கு ஒரு கதை உண்டு. பல நூறு ஆண்டுகளுக்கு முன், மீன் பிடிப்படகு ஒன்று அமைதியான கடலில் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று புயல் வீசியது. பெரிய மழை பெய்தது. மீனவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தனர். படகிலுள்ள நங்கை ஒருத்தி எழுந்துநின்று, புயலை நிற்குமாறு கட்டளையிட்டாள். புயல் நின்றுவிட்டது. கடற்பரப்பு அமைதியானது. படகு, பாதுகாப்பாக துறைமுகம் சென்றடைந்தது. கடற்கரையில் இறங்கிய பிறகு, இந்நங்கை மௌனமாக இருந்தாள். அவள் நேரடியாக மகௌ மலையை நோக்கிச் சென்றுவிட்டாள். திடீரென்று ஒளி வட்டம் வீசி இந்நங்கை ஆவியாக மாறினாள். அவள் இறங்கிய கடற்கரையில் அவளுக்குக் கோயிலொன்றை மக்கள் கட்டினர். மீனவர்களுக்கு அமைதியும் மங்களமும் தரும் இந்நங்கையை மதிப்புடன் வழிபடுகின்றனர். இக்கோயிலின் பெயர் மகௌ. 16வது நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதலாவது தொகுதி போர்த்துகீசியர், மகௌ வந்த போது, அங்குள்ள மக்களிடம் அவ்விடத்தின் பெயரை விசாரித்தனர். இக்கோயிலின் பெயரை விசாரிப்பதாக அங்குள்ள மக்கள் தவறாகப் புரிந்துகொண்டனர். மகௌ என்று பதிலளித்தனர். போர்த்துகீசியர் அங்குள்ள மக்களின் உச்சரிப்பின் படி, ஔமன்னை(MACAU)மகௌ என்று மொழி பெயர்த்தனர்.
1  2  3