• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-26 16:27:46    
சீனாவின் ஷி சியா சுவாங் நகரம்

cri

ஷி யா சுவாங் நகரமானது, வட சீனாவிலுள்ள ஹொபெய் மாநிலத்தின் தலைநகராகும். பெய்ஜிங்கிற்கு தெற்கில் 260 கிலோமீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது.

ஷியா சுவாங் நகரத்தின் சுற்றுப் பயண வளம், மிகவும் செழிப்பானது, இங்கு வரலாற்று சிறப்புமிக்க காட்சி தலம் பல, காணப்படுகின்றன. சீனாவின் சமகால புரட்சி நினைவு இடங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்பிட வளமும், மலை காடு, ஏரி, வெந்நீர் ஊற்று உள்ளிட்ட இயற்கை வளமும் உண்டு. இந்நகராட்சித் தலைவர் கூறுகிறார்—

"சீனத் தேசத்துக்கு, 5 ஆயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. இவ்வளவு நீண்டகால வரலாற்றுப் போக்கில், கிட்டத்தட்ட அனைத்து காலகட்டங்களுக்குரிய காட்சி தலம், இந்நகரில் நிலவுகிறது. லுங்சிங் கோயில், 1400 ஆண்டுகால வரலாறு உடையது. அதன் பரப்பரப்பு, 85 ஆயிரத்து 200 சதுர மீட்டராகும். கோயிலில், சுவர் ஓவியம், சிலை ஆகியவை அனைத்துக்கும் ஒரு புத்த மத கதை உண்டு. எடுத்துக்காட்டாக, சாக்கிய முனியின் பிறப்பு, துறவியாக மாறுவது, தவம் செய்வது முதலியன உள்ளிட்ட பல சுவர் ஓவியம் பெரும் அளவிலும் நுணுக்கமாகவும் வரையப்பட்டன. மிகவும் அழகானவை. அவற்றில், வண்ண மண்ணால் ஆன குவான்யின் புத்தரின் சிலை மக்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கின்றது."

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், இந்த சிலை உருவாக்கப்பட்டது. பு தோ மலையை பின்னணியாகக் கொண்டு, இந்த சிலை உருவாக்கப்பட்டது. மலையில் தேவ தூதரைப் பாதுகாக்கும் 30க்கும் அதிகமான வீரர்களின் சிலைகளும் காணப்படுகின்றன. இவற்றில், 3.4 மீட்டர் உயரமுடைய தலைகீழாக அமர்ந்துள்ள குவான்யின் புத்தரின் சிலை, கண்ணை மிகவும் கவரும் ஒன்றாகும். அதை தலைகீழாக அமரும் சிலையாக அழைப்பது ஏன்? இது பற்றி, பயண வழிகாட்டியான செல்வி வாங்லி கூறியதாவது—

1  2