• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-26 16:27:46    
சீனாவின் ஷி சியா சுவாங் நகரம்

cri

"குவான்யின் கூறிய ஒரு வார்த்தை தான் இதற்கு காரணமாகும். மனிதர் அனைவரையும் துயரத்திலிருந்து காப்பாற்றும் வரை, நான் ஓட்ட மாட்டேன் என்று குவான்யின் கூறியிருந்தார். மனிதர் பிடிப்பது ஓய்ந்த பாடில்லை. எனவே, அவளுடைய சிலை தலைகீழாக அமரும் வடிவத்தில் அமைகின்றது. அவளுடைய இந்த அமரும் வடிவம் பல பொருட்களை உள்ளடக்குகிறது. அவளுடைய இடது கால், ஒரு தாமரையின் மேல் மிதக்கிறது. மண்குவியலில் வளர்ந்து மாசுபடாமல் இருப்பதென்ற புத்த மதத்தின் குணத்தை இந்த தாமரை வெளிப்படுத்துகிறது. அவளுடைய வலது கால் சம்மாணமாக இருக்கிறது. இது நல்ல அதிருஷ்டத்தையும் மனநிறைவையும் வெளிப்படுத்துகிறது" என்றார் செல்வி வாங் லி.

சிபான்பொ எனும் இடம், சீனப் புரட்சியின் புனித இடமாகும். நவ சீனா நிறுவப்படுவதற்கு முன், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியும் அப்போதைய இக்கட்சியின் தலைவர் மாவ் சேதுங்கும் அங்கு மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்தனர். அத்துடன் சீனப் புரட்சியின் தீர்க்கமான வெற்றியையும் பெற்றனர். இன்று இங்கு ஒரு சுற்றுப்பயண இடமாக மாறியுள்ளது. சிபான்பொ நினைவகத்தின் தலைவர் சாவ் குய் சி எடுத்துக்கூறியதாவது—

"சிபான்பொ எனும் இடமானது, 40ஆம் ஆண்டுகளின் பிற்காலத்தில் சீனப் புரட்சியின் தலைமை மையமும், விடுதலைப் போரின் ஆணை மையமும் ஆக விளங்கியது. 1948ஆம் ஆண்டு மே திங்கள் 26ஆம் நாள் தோழர் மாவ் சேதுங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மற்றும் விடுதலைப் படை ஆகியவற்றுடன் இணைந்து இந்த இடத்தில் நுழைந்து, சீனாவை விடுதலை செய்த மூன்று போரியக்கங்களுக்கு ஆணையிட்டார். இன்று சிபான்பொவில், சிபான்பொ கண்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது, மாவ் சேதுங், சோ என் லாய் உள்ளிட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது தலைமுறை தலைவர்களின் பழைய இல்லங்கள், விடுதலைப் படையின் பழைய தலைமையகம் ஆகியவை திறந்துவிடப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் பல பத்தாயிரம் சீனப் பயணிகளும் வெளிநாட்டு நண்பர்களும் இந்கு வந்து, சிபான்பொவின் வரலாற்றுச் சிறப்பிடங்களையும் இயற்கை காட்சியையும் பார்வையிடுகிறார்கள்."

கடந்த சில ஆண்டுகளில், சுற்றுலா துறையின் வளர்ச்சி மற்றும் கட்டுமானத்தில் ஷி சியா சுவாங் நகர அரசு மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது, முழு நகரத்திலும் சுற்றுலாவுக்கான 24 இயற்கை காட்சி தலங்கள் உள்ளன. புள்ளிவிபரங்களின் படி, 2001ஆம் முதல் 7 திங்களில், சுமார் 80 லட்சம் உள்நாட்டு பயணிகளும் 15 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் ஷி சியா சுவாங் நகருக்கு வருகை தந்துள்ளனர் என்று இந்நகராட்சித் தலைவர் சாங் சேங் யெ தெரிவித்தார்.


1  2