• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-27 21:52:54    
பெய்சிங்கில் சிறுபான்மை தேசிய இன கைவினைஞர்

cri

Ha Yi Qi என்பவர், "படடம் ஹா"யின் நான்காவது தலைமுறையினர். செய்தியாளரிடம், தமது குடும்பத்தினர்கள் பட்டம் உருவாக்கும் வரலாறு பற்றி கூறியதாவது:

"எங்கள் குடும்பத்தினர்கள், 160 ஆண்டுகளுக்கு முன்பே பட்டம் தயாரிக்கத் துவங்கினோம். அவர்கள், அதிதுவக்கத்திலேயே He Bei மாநிலத்தின் He Jian இடத்தைச் சேர்ந்தவர்கள். வேய் இனத்தைச் சேர்ந்தவர்கள். அப்புறம் வேய் இனம் வாழும் பிரதேசமாகும். எனது பாட்டனார், "ஹா குடும்ப பட்டம்" வளர்ச்சிக்கு அடிப்படையிட்டுள்ளார். அவர் முதலாவது தலைமுறையினர். இரண்டாவது தலைமுறையினரான எனது பாட்டனார் அதிகாரப்பூர்வமாக கடை நடத்தி, பட்டம் விற்பதை பிழைப்பு தொழிலாக நடத்தத் துவங்கினார்" என்றார் அவர்.

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில்லேயே, ஹார் குடும்பத்தின் பட்டங்கள் உலகில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. 1915ம் ஆண்டு வண்ணத்துப்பூச்சி, தட்டாம்பூச்சி, Phoenix பறவை, கொக்கு ஆகிய வடிவங்களிலான நான்கு பட்டங்கள் பனாமாவில் நடைபெற்ற உலக பொருள் காட்சியில் காண்பிக்கப்பட்டன. செம்மையான சீனப் பாரம்பரிய கைவினை கலையினால் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்று வெள்ளி பதக்கம் வென்றது. நான்காவது தலைமுறையினரான Ha Yi Qi பத்து வயதிலிருந்தே தந்தையாரிடம் பட்டம் தயாரிக்கும் கலையைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். பாரம்பரிய கலை நுட்பத்தை, உலகில் முன்னேறிய தயாரிப்பு கலை நுட்பத்துடன் ஒன்றிணைத்து வளர்ப்பதினால், ஹா குடும்ப பட்டம் தயாரிப்பில் புதிய வளர்ச்சி காணப்பட்டது.

பட்டம் என்ற கைவினைப்பொருள் தவிர, பெய்ஜிங்கில், கண்டுகளிப்பதற்கு நாட்டுப்புற கைவினைப்பொருட்கள் பல உண்டு. கண்ணாடி திராட்சை என்பது பெய்சிங்கில் தனித்தன்மை வாய்ந்த ஒரு பாரம்பரிய கைவினைப் பொருளாகும். கண்ணாடியை தீயில் உருக்கி, பின்னர், ஒரு குழாய் மூலம் ஊதி இத்திரவம் திராட்சைப் பழ வடிவமாகி, சாயந்தோய்ந்து அவற்றை சங்கிலித் தொடராக இணைத்து துண்டுகளையும் இலைகளையும் பகக்மாக வைத்து, இறுதியில் ஒருவகை வெள்ளைப் பொருளை போட்ட பின், ஊதா நிறம் பச்சை நிறம் உள்ள திராட்சை வடிவ கைவினைப்பொருள் தயாராகின்றன.

1  2  3