• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-27 21:52:54    
பெய்சிங்கில் சிறுபான்மை தேசிய இன கைவினைஞர்

cri

"Chang" எனும் மங்கோலிய குடும்ப கைவினைஞர்கள், இத்தகைய கண்ணாடி திராட்சை தயாரிக்கின்றார். திராட்சை "Chang" என்று மக்கள் அழைக்கின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன் சீனாவின் இறுதியான நிலபரப்பு சிங் வம்சக்காலத்து பேராசரின் தாயான Ci Xi, Chang குடும்பம் தயாரித்த கண்ணாடி திராட்சை பார்த்த பின், பாராட்டி, பதாகை ஒன்றில் வசனம் எழுதி தந்தார். பின்னர், "திராட்சை Chang", புகழ்பெற்று வளரத் துவங்கினார்.

அதன் 5வது தலைமுறையினரான Chang Hong அம்மையார் பேசுகையில், பல தலைமுறையினர்கள் கையேற்று, வளர்த்த தமது குடும்பத்தின் இக்கைவினை கலை, தரமாகியிருப்பதாகக் கூறினார்.

"எங்கள் குடும்பம், மங்கோலியாவைச் சேர்ந்தது. சிங் வம்ச காலத்தின் இறுதியில் பேராசர், மங்கோலிய அரசகுமாரி ஒருவளை மணம் செய்ய, எங்கள் தலைமுறையினர்கள் அவளுடன் சேர்ந்து பெய்சிங் வந்தோம். எங்கள் குடும்பம் தயாரித்த திராட்சை, மிகவும் மெல்லியது. எப்படிப்பட்ட நிறங்கள் இருந்தாலும், ஒளியில் பார்க்கும் போது, திராட்சைப்பழம் போன்றே தெரியும். உண்மையான திராட்சைப் பழம் போலிருக்கின்றது" என்றார்.

முன்பு, தமது குடும்பத்தின் பாரம்பரிய சிறப்பு கைவினை நுட்பத்தை பராமரிக்கும் பொருட்டு, Chang குடும்பத்தைச் சேர்ந்த மங்கையர்கள் திருமணம் செய்யாது. வாழ்நாள் முழுவதிலும் அவர்கள் அயராது உழைத்தனர். இருப்பினும் அவர்கள் மனவருத்தம் அடையவில்லை.

இந்த கைவினை கலை நுட்பம், குடும்பத்தின் தொழிற்கூடத்தில் ஒருவரின் கைவேலையாகவே இருப்பதால், காலப்போக்கில், தற்போது, இது அழியும் அபாயத்தில் உள்ளது. பெய்சிங் மாநகராட்சி நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தின் தலைமை செயலாளர் Yu Zhi Hai இது பற்றி கூறியதாவது:

"பொருட்காட்சி, கருத்தரங்கு, வெளிநாட்டில் பரிமாற்றம், கருத்தரங்கு ஆகியவற்றை நடத்துவதன் மூலம் நாட்டுப்புற கலையைப் பாதுகாத்து வளர்த்துள்ளோம். நாட்டுப்புற கலைக்கான பெய்சிங் மாநகராட்சியின் முதலீடு, ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றது. தவிர, இளம் கலைஞர்கள் வளர்க்க பல்கலைக்கழகங்களில் பாடம் சொல்லிக்கொடுக்கின்றோம். இதன் மூலம் மேலும் அதிகமான இளைஞர்கள், நாட்டுப்புற கலையை அறிந்து கொள்ளச் செய்திடுகின்றோம்" என்றார் அவர்.

பல துறைகளின் உதவியுடன், தனித்தன்மை வாய்ந்த நாட்டுப்புறக்கலை படிப்படியாக மீட்சியடைந்து பயனுள்ள முறையில் பாதுகாக்கப்படுகின்றது.


1  2  3