• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-30 09:57:49    
சீனாவில் அந்நிய முதலீட்டு வங்கியின் வளர்ச்சி

cri

உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது சீனா அளித்த வாக்குறுதிக்கிணங்க, கடந்த ஆண்டின் இறுதியில், பெய்ஜிங், சி ஆன், ஷென் யாங் உள்ளிட்ட 5 மாநகரங்களிலும் ரென்மின்பி அலுவலில் ஈடுபட அந்நிய முதலீட்டு வங்கிகளுக்கு சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுவரை, ரென்மின்பி அலுவலில் அந்நிய முதலீட்டு வங்கிகள் ஈடுபடக் கூடிய நகரங்களின் எண்ணிக்கை, 18 ஆக அதிகரித்துள்ளது. சீன வங்கி துறை சந்தையில் வெளிநாட்டுத் திறப்பு பணி வேகமாக வளர்ச்சியுறுவதுடன், அந்நிய முதலீட்டு வங்கிகளும், சீனாவில் மேலும் உயர் வேகத்தில் வளர்ச்சியுற்று வருகின்றன. சீன வங்கிகளுக்கும் அந்நிய முதலீட்டு வங்கிகளுக்கமிடையிலான போட்டி தீவிரமாகி வருகிறது.

2001ஆம் ஆண்டின் இறுதியில், உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் வங்கி துறை சந்தையை படிப்படியாக திறந்து வைப்பதாக சீனா வாக்குறுதி அளித்தது. அதாவது, 2006ஆம் ஆண்டின் இறுதி வரை, அந்நிய முதலீட்டு வங்கிகள் சீனாவில் அலுவல் நடத்துவதற்கு, இடம் மற்றும் வாடிக்கையாளர் பற்றிய வரையறை இல்லை. இவ்வாக்குறுதியை சீனா அளித்தது முதல், அந்நிய முதலீட்டு வங்கிகள் சீன வங்கி துறையின் திறப்பு போக்கில் பெரும் கவனம் செலுத்தி வருகின்றன.

அந்நிய முதலீட்டு வங்கி ரென்மின்பி அலுவலில் ஈடுபட பெய்ஜிங் அனுமதி வழங்கிய பின், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கூட்டு நிறுவனத்தின் (The Hong Kong and Shanghai Banking Corporation Limited) பெய்ஜிங் கிளை, முதலில் ரென்மின்பி அலுவலை நடத்தக் கூடிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. தற்போது அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வங்கியின் இயக்குநர் திங் கோ லியாங் கூறியதாவது—

"2002ஆம் ஆண்டு பெங்ஜிங் கிளையில் 50 பணியாளர் உள்ளனர். இப்போது எங்கள் பணியாளரின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. அலுவல் பல மடங்கு அதிகமாகும். மேலதிக கிளைகளை நடத்தி தொடரமைப்பை வளர்க்க வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்" என்றார் அவர்.

பிரிட்டிஷ் Standard Chartered வங்கி (Hong Kong) Limited, ஜப்பானிய Tokyo-Mitsubishi வங்கி, அமெரிக்காவின் Citi வங்கி, சிங்கப்பூர் DBS வங்கி (Hong Kong) உள்ளிட்ட 10 அந்நிய முதலீட்டு வங்கிகள், புதிதாக திறந்து வைக்கப்பட்ட நகரங்களில் ரென்மின்பி அலுவலில் ஈடுபடும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன. சிங்கப்பூர் DBS வங்கியின் சீன பிரதேசத்துகுப் பொறுப்பான இயக்குநர் லியாங் தியான் சாவ் கூறியதாவது—

"ஆசியாவில், ஈர்ப்பு ஆற்றலைக் கொண்ட, மிக பெரிய சந்தை சீனா ஆகும். சீன சந்தையில் ரென்மின்பி அலுவலுக்கு பெரும் உள்ளார்ந்த ஆற்றல் உண்டு. மிகவும் பெரியது. இது அந்நிய நாணயத்தை விட மிகவும் அதிகம். எனவே இதில் அந்நிய முதலீட்டு வங்கிகள் பேரார்வம் கொள்கின்றன" என்றார் அவர்.

ரென்மின்பி அலுவல் திறந்து வைக்கப்பட்ட புதிய நகரங்கள் வெளியிடப்பட்ட 2 திங்களுக்குள், சீன வங்கி துறை கண்காணிப்பு மற்றும் நிர்வாக கமிட்டி, 8 அந்நிய முதலீட்டு வங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் சீனாவில் அனுமதி பெற்றுள்ள அந்நிய வங்கி நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆகும். புதிதாக கிடைத்த புள்ளிவிபரங்களின் படி, 19 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 62 அந்நிய முதலீட்டு வங்கிகள் சீனாவில் சுமார் 200 நிறுவனங்களை நிறுவியுள்ளன. அவற்றின் மொத்த சொத்து மதிப்பு 6500 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. சீன வங்கி துறையின் நாணய நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பில் இது சுமார் 1.8 விழுக்காடு ஆகும்.

1  2