• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-30 09:57:49    
சீனாவில் அந்நிய முதலீட்டு வங்கியின் வளர்ச்சி

cri

சீனாவில் அலுவல் நடத்தும் வேகத்தை தாம் விரைவுபடுத்துவதாக அந்நிய முதலீட்டு வங்கிகளின் பொறுப்பாளர் சிலர் செய்தியாளருக்குப் பேட்டி அளித்த போது தெரிவித்தனர். இயக்குநர் லியாங் தியான் சாவ் கூறியதாவது—

"முக்கிய அலுவலை சீனாவிற்கு தொடர்ந்து மாற்றி வருவோம். எதிர்காலத்தில் சீனாவிலுள்ள அலுவல் எங்கள் குழுமத்தின் மொத்த அலுவலில் பெரும் பங்கு எடுக்க முடியும் என்று நாங்கள் விரும்புகின்றோம்" என்றார் அவர்.

சீனாவில் கிளைகளை நிறுவுவது தவிர, நடுத்தர மற்றும் சிறிய சீன வங்கிகளில் பங்கு பத்திரங்களை வாங்குவதன் மூலம், அந்நிய வங்கிகள் சீனாவில் அலுவலை வளர்த்துள்ளன. தற்போது, 9 சீன வங்கிகள், அந்நிய வங்கிகளின் முதலீட்டை ஏற்றுக் கொண்டுள்ளன. சீனாவில் அந்நிய முதலீட்டு வங்கியின் விரைவான வளர்ச்சியை சீன சமூக அறிவியல் கழக நாணய ஆய்வகத்தின் தலைவர் லி யாங் மதிப்பிட்டார். அவர் கூறியதாவது—

"அந்நிய முதலீட்டு வங்கிகள், சீனாவை அவற்றின் உலக நெடுநோக்கு திட்டத்தில் இன்றியமையாத பங்காக கொள்கின்றன. தற்போதும் எதிர்காலத்திலும், உலக லாபத்தின் அதிகரிப்பை சீனா விரைவுபடுத்தி வருகிறது. சீனாவிலுள்ள முசலீட்டை அதிகரிக்க வேண்டும் என்று The Hong Kong Banking Corporation Limited, Citibank முதலிய உலகளாவிய வங்கிகள் அறிந்து கொண்டுள்ளன" என்றார் அவர்.

ரென்மின்பி அலுவல் முன்னதாக திறந்து வைக்கப்பட்ட ஷாங்காய் மாநகரில், அந்நிய முதலீட்டு வங்கிகளின் அலுவல் அதிகரிப்பதால், சீன வங்கிகளின் அலுவல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முற்பாதியில், சீனாவின் ஒட்டுமொத்த சரிப்படுத்தல் கொள்கையினால், ஷாங்காயின் நாணய நிறுவனங்களின் ரென்மின்பின் மற்றும் அந்நிய நாணயத்தின் கடன் வழங்கல் தொகை, 2003ஆம் ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4000 கோடி ரென்மின்பி யுவான் குறைந்துள்ளது. ஆனால், அந்நிய முதலீட்டு நாணய நிறுவனங்களின் வங்கி சேமிப்பும் கடன் வழங்கல் தொகையும் 50 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளன.

அந்நிய முதலீட்டு வங்கிகளுடனான போட்டியை எதிர்நோக்கி, பல சீன வங்கிகள், சொந்தமாக போட்டி போடும் திறனை உயர்த்தி வருகின்றன. எடுத்துக்காட்டாக, புதிய சேவைகளை வழங்கி வாடிக்கையாளரை ஈர்ப்பது அவை மேற்கொண்டுள்ள முக்கிய நடவடிக்கையாகும். இவ்வாண்டு ஜனவரி 10ஆம் நாள் முதல், சீன வங்கிகள் வெளியிட்ட ChinaUnionPay எனும் குறிப்பு பொறிக்கப்பட்ட வங்கி அட்டையை, தென் கொரியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரில் சீன மக்கள் நேரடியாக பயன்படுத்த முடியும்.

அந்நிய வங்கிகள் சீனாவில் விரைவாக வளர்ச்சி அடைவது சீன வங்கிகளுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளன. வாய்ப்பையும் வழங்கியுள்ளன. திறந்து வைக்கப்பட்ட சந்தையை எதிர்நோக்கி, சீன வங்கி துறை, போட்டி, சீர்திருத்தம் முதலியவற்றில் படிப்படியாக பக்குவம் அடையும் என்று சீன வங்கி தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.


1  2