• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-31 08:41:10    
சீன ஸ்டரிஜன் மீனின் செயற்கை வளர்ப்பு

cri
சீனாவில் காணப்படும் சுறா மீன் போன்ற ஒரு வகை ஸ்டர்ஜன் மீனின் செயற்கை இனப் பெருக்கம் சீன விலங்கியல் அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பிரச்சினையாகும். மூன்று தலைமுறை ஆய்வாளர்களின் 30 ஆண்டுகால முயற்சிகஷுக்கு பின் சீன ஸ்டர்ஜன் மீனின் செயற்கை இனப் பெருக்கம் இது வரையிலும் நிறைவேற வில்லை. இவ்வகை மீனின் எண்ணஇக்கை குறைந்து வரும் மோசமான நிலைமையில் ஆய்வாளர்கள் அண்மையில் ஓர் ஆய்வு திட்டத்தைத் துவக்கியுள்ளனர். 3, 4 ஆண்டுகளுக்குள் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என அவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

சீன ஸ்டர்ஜன் மீன் சீனாவில் மட்டுமே காணப்படுவது. அது ஸ்டர்ஜன் மீன் வகைகளில் மிகவும் அரிதான ஒன்றாகும். சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சீன ஸ்டர்ஜன் மீன் உலகில் வாழ்ந்து இனப் பெருக்கம் செய்தது. உலகில் மிகவும் புராதன முதுகெலும்பு கொண்ட விலங்குகளில் ஒன்றான சீன ஸ்டர்ஜன் மீன் "உயிருள்ள புதை வடிவங்கள் எனவும்""நீர்வாழ் ராட்சத பண்டா"எனவும் அழைக்கப்படுகின்றது. இவ்வகை மீன் பொதுவாக 4 மீட்டர் நீளமும் ஆயிரம் கிலோகிராம் எடையும் உடையது. அது நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது.

பொதுவாக கூறின் செயற்கை இனப் பெருக்கமானது அழிவின் விளிம்பில் தத்தளிக்கும் காட்டு விலங்குகள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்குச் சிறந்த வழிமுறையாகும். எனவே சீன ஸ்டர்ஜன் மீனைக் காப்பாற்றும் பொருட்டு கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளின் துவக்கம் முதல் சீன நீர் வாழ் உயிரின அறிவியல் ஆய்வு கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வெய் சி வெய் கூறியதாவது சீன ஸ்டர்ஜன் மீனின் செயற்கை இனப் பெருக்க முயற்சி 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய போதிலும் இது வரையிலும் எந்த முன்னேற்றமும் அடையவில்லை. தற்போது நாங்கள் சீன ஸ்டர்ஜன் மீன்களைப் பிடிப்பதன் மூலம் இனப் பெருக்கம் செய்கிறோம். செயற்கையான நிலைமையில் கீழு இனப் பெருக்கம் செய்ய முயியவில்லை. இப்படி செய்ய வேண்டுமானால் செயற்கை நிலைமையில் கீழ் வளரும் ஆண் பெண் மீன்கள் தேவைப்படுகின்ற என்றார் அவர்.

நன்னீரில் முதலாவது தலைமுறை சீன ஸ்டர்ஜன் மீன்களை இனப் பெருக்கம் செய்யும் நுட்பம் சீனாவில் மிகவும் தேர்ச்சி பெற்றது. தற்போது ஆய்வாளர்கள் மூன்றாவது தலைமுபறை சீன ஸ்டர்ஜன் மீன்களை இனப் பெருக்கம் செய்யும் நட்பம் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். ஆய்வு குறிக்கோள் தெளிவாக இருந்த போதிலும் சீன ஆய்வாளர்கள் இரண்டாவது தலைமுறை சீன ஸ்டர்ஜன் மீன்களை செயற்கை நிலைமையில் வளரச் செய்ய முடியவில்லை என்று அறிவித்தனர்.

1  2