• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-31 08:41:10    
சீன ஸ்டரிஜன் மீனின் செயற்கை வளர்ப்பு

cri

இப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு சீன ஸ்டர்ஜன் மீன்கள் வளர்வதற்கு ஏற்ற நீர் வாழ் சூழ்நிலயை உருவாக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்காக யாங்சி ஆற்று நீர்வாழ் உயிரின ஆயுவகம் தான் வளர்ச்த 10க்கும் மேற்பட்ட 7-8 வயது முதலாவது தலைமுறை சீன ஸ்டர்ஜன் மீன்களை மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்திலிருந்து தலைநகரான பெய்ஜிங்கிற்கு அனுப்பியுள்ளது. இவை பெய்ஜிங் கடல் நீர்வாழ் உயிரின ஆய்வகத்தில் முன்பு சுறா மீன் வளர்ந்த குளத்தில் விடப்பட்டுள்ளன.

பெய்ஜிங் கடல் வாழ் உயிரின ஆய்வகத்தின் சாதனங்கள் நீரின் தப்பவெப்பம் உப்பு அளவு ஆகியவற்றைச் சரிப்படுத்த முடியும். இதனால் சீன ஸ்டர்ஜன் மீன் வாழ கூடிய இயற்கையான சூழ்நிலையை உருவாக்க முடியும். தவிர இங்குள்ள கண்காணிப்பு சாதனங்களும் ஒப்பீட்டளவில் முன்னேறியவை. சீன ஸ்டர்ஜன் மீன்களின் செயற்கை இனப் பெருக்கத்துக்கு பல தொழில் நுட்ப ஆதரவையும் அது வழங்க முடியும் என்று இவ்வகத்தின் மேலாளர் ஹு கைய் பொஃங் விவரித்துக் கூறினார். அவர் கூறியதாவது நாங்கள் சில குறிப்பிட்ட சாதனங்களை பொருத்தி தகவல்களை பதிவு செய்து தொடர்ந்து கண்காணிக்கிறோம். நாங்கள் அவற்றை எல்லா காலநிலையிலும் கண்கானிப்பட அளவிட வேண்டும். பிறகு ஒவ்வொரு காலக் கட்டத்திலும் அவற்றில் உண்டாகும் மாற்றம் மற்றும் வளர்ச்சியைப் பதிவு செய்து செயற்கை இனப் பெருக்க ஆராய்சிக்கு ஒரு அடிப்படையை உருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.

முதலாவது தலைமுறை சீன ஸ்டர்ஜன் மீன்கள் இவ்கத்தில் இயல்பான முறையில் வளர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தவிரவும் அவற்றின் வளர்ப்பு காலத்தையும் குறைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று யாங்சி ஆற்று நீர் வாழ்வன ஆய்வகத்தின் டாக்டர் வெய் சி வெய் கூறினார். அவர் கூறியதாவது இயற்கையான சூழ்நிலையில் சீன ஸ்டர்ஜன் மீன்கள் பக்குவம் அடைவதற்கு சுமார் 18 ஆண்டுகள் தேவைப்படுகின்றன. செயற்கை சூழ்நிலையில் அவற்றின் பக்குவக் காலத்தை குறைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். என்றார் அவர்.

தவிரவும் சீன ஆய்வாளர்கள் அவற்றின் வளர்ச்சிக்குச் சாதகமான சத்துப் பொருட்களையும் ஆராய்ந்து வளர்த்துள்ளோம். இப்பொருட்களை உணவுப் பொருட்களில் சேர்த்து அவற்றுக்கு ஊட்டினால் அவற்றின் வளர்ச்சியை விரைவுப்படுத்த முடியும். இவ்வாய்வகத்தின் ஆராய்ச்சியாளர் லியூ சியென் யி கூறியதாவது உணவுப் பொருட்களைப் பற்றி நாங்கள் சில திட்டங்களை வகுத்திருக்கிறோம். இப்போது நாங்கள் ஆராய்ந்து தயாரித்த உணவுப் பொருட்களின் சத்துப் பொருட்கள் அதன் ஜீவ அணு மற்றும் முட்டைகளின் இயல்பான வளர்ச்சிக்கு உத்தரவாதம் தர முடியும் சில வைடாமின் புரோடின் மற்றும் கொழுப்புகள் இந்த சத்துப் பொருட்களில் உண்டு என்றார் அவர்.

யாங்சி ஆற்று நீர் வாழ்வன ஆய்வகத்தின் திட்டத்திற்கேற்ப இந்த முதலாவது தலைமுறை சீன ஸ்டரிஜன் மீன்கள் 3,4 ஆண்டுகளுக்குள் இரண்டாவது தலைமுறை சீன ஸ்டரிஜன் மீன்களை இனப் பெருக்கம் செய்யும் ஆற்றல் பெறும். இப்பணி வெற்றி பெற்றால் பெய்ஜின் கடல் வாழ் உயிரின ஆய்வகம் சீன ஸ்டரிஜன் மீன்களை செயற்கை இனப் பெருக்கம் செய்வதன் தளமாக மாறிவிடும். அது இத்தகைய அரிய நீர் வாழ் உயிரினங்களை இடைவிடாமல் வளர்க்கும்.

நேயர்கள் இதுவரை சீன ஸ்டரிஜன் மீனின் செயற்கை இனப் பெருக்கம் பற்றி கேட்டீர்கள். இத்துடன் நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.


1  2