பன்னாட்டு நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளை சீனாவில் அமைத்தது சீனாவின் தொடர்புடைய துறைகளுக்கு தாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, சாதனம், மூலதனம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி வளத்தை சீர்படுத்தும் திறன் ஆகிய துறைகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மேம்பாடு உண்டு. தவிர, இந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகள் திறப்பு சூழ்நிலையை உருவாக்கி, சீன மற்றும் அந்நிய ஆய்வாளர்களுகிடையே பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகள் சீனாவில் விரைவாக வளர்ச்சி அடைவதைக் கண்டு, சீன தொழில் நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளுக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது. மனித வள நிர்வாகத்திலும் தொழில் நடத்துவதிலும் சீனாவின் பல தொழில் நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றிகரமான அனுபவத்தைப் பயன்படுத்தி, தங்களது மேம்பாட்டை வெளிக்கொணர்ந்து, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை நடத்துகின்றன.
1 2
|