ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவுகளின் பங்கிற்கான ஏற்பாட்டில், பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், UFSoft நிறுவனம் வித்தியாசமாக இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையில், இது UFSoft நிறுவனத்துக்கு வளர்ச்சி வாய்ப்பை வழங்குகிறது என்று அதன் துணை ஆளுநர் யாங் ச்சி சியோங் கருத்துத் தெரிவித்தார்.
"பன்னாட்டு நிறுவனங்கள் நிறுவிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையங்கள், அவற்றின் உலக வளர்ச்சியில் ஒரு பகுதியாகும். உலகளவில் வளர்க்கப்படுகின்றன. சீனாவுக்கு ஏற்ற வளர்ச்சி ஓரளவு குறைவானது. ஆனால் எங்கள் வளர்ச்சி சொந்த நாட்டின் தேவைக்கு இணங்க வளர்க்கப்படுகிறது. மேலும், சீன உள் நாட்டின் நிலைமை பற்றி அவை தெரிந்து கொண்டது போதாது." என்றார் அவர்.
பன்னாட்டு நிறுவனங்களின் அலுவல் சீனாவில் பன்முகங்களிலும் வளர்வதுடன், சீனாவில் அவை நிறுவும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளும் மேலும் கூடுதலாகும். சீனாவின் தொழில் நிறுவனங்களின் போட்டியிடும் ஆற்றலை வலுப்படுத்தி, விரைவான வளர்ச்சி அடையும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர். 1 2
|