இதுவரை, பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் நிறுவிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகள் எழு நூற்றைத் தாண்டியுள்ளன. மின்னணு, மருத்துவம் மற்றும் மருந்து, வேதியியல் உள்ளிட்ட பல துறைகளில் அவை ஈடுபடுகின்றன என்று ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. சீனாவில் உற்பத்தி ஆலை மற்றும் விற்பனை தொடரமைப்பு நிறுவிய பின், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பை துவக்குவது, பல பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி நெடுநோக்கில் ஒரு முக்கிய பகுதியாக மாறியுள்ளது. இதற்கான முதலீட்டை அவை அதிகரித்துள்ளன.
கடந்த நூற்றாண்டின் 90ஆம் ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகளை நிறுவத் துவங்கின. பிறகு அவற்றின் வளர்ச்சி வேகம் விரைந்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டுமே சுமார் 300 பன்னாட்டு நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புகள் சீனாவில் நிறுவப்பட்டுள்ளன.
தலைமையகம் டென்மார்க் தலைநகர் கோப்பன்ஹேகனில் அமைந்துள்ள Novonordisk நிறுவனம், உலகில் சர்க்கரை நோய் சிகிச்சைக்கு மருந்து உற்பத்தி செய்யும் மிகப் பெரிய தொழில் நிறுவனமாகும். கடந்த ஆண்டில் இதன் ஆண்டு விற்பனை வருமானம் 400 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியது. இதன் ஒரே ஒரு வெளிநாட்டு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. கடந்த நூற்றாண்டின் 60ஆம் ஆண்டுகளில் Novonordisk நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் சீன சந்தையில் நுழைந்தன. 11 ஆண்டுகளுக்கு முன் அது சீனாவில் உற்பத்தி ஆலையை நிறுவியது என்று இந்த நிறுவனத்தின் பெய்ஜிங் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் வாங் பௌ பின் செய்தியாளரிடம் கூறினார்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பை சீனாவில் நிறுவியது, சீன சந்தையில் அதன் கவனத்தை காட்டுகிறது என்று அவர் கருத்துத் தெரிவித்தார்.
"Novonordisk நிறுவனத்துக்கு, உலகளவில் சீனா ஒரு முக்கிய சந்தையாகும். சீனாவின் சர்க்கரை நோய் சிகிச்சை லட்சியத்தில் இது கவனம் செலுத்தி வருகிறது. தற்போது சீனாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்து வருகிறது. சீனாவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பை நிறுவுவது, சீனாவில் நீண்டகாலமாக முதலீடு செய்வதாக, Novonordisk நிறுவனம் கொடுத்த வாக்குறுதியாகும்." என்றார் அவர்.
1 2
|